அனைவருக்குமோர் நற்செய்தி!

கவிதை மலர்களாய் உதிர்ந்த கண்ணீர் பூக்கள்..

ப்பிரிவுக்குப் பின் கவிதைகளனைத்தும் “பிரிவுக்குப் பின்” புத்தகத்திலிருந்தே பதியப் படுகின்றன. புத்தகம் வாங்க விரும்புவோர் குவைத்தில் (00965) 67077302 என்ற எண்ணிற்கும், சென்னையில் 25942837, 9786218777 என்ற எண்களுக்கும் தொடர்பு கொண்டு புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். புத்தக விலை, ரூ. 70

இப்புத்தகங்களின் மூலம் வரும் வருமானங்களை உதவியின்றி தவிப்போருக்கு உதவவே பயன் படுத்துகிறோமென்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

முகில் பதிப்பகத்தின் முதல் வெளியீடு இந்த ‘பிரிவுக்குப் பின்’ எனினும் நூலழகு படுத்திய தமிழலை இஷாக்கிற்க்கும், தொடர்ந்து என் எழுத்தின் பாடுபொருளாகவும் பலமாகவும் இருந்துவரும் உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல உரித்தாகட்டும்.

பணிவன்புடன்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

10 Responses to அனைவருக்குமோர் நற்செய்தி!

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஐயா அவர்களுக்கு வணக்கம்,

      என் நன்றிகளும் தங்களுக்கிருக்கட்டும். இயலுமாயின் புத்தகம் படித்துவிட்டு விமர்சனம் சொல்லுங்கள். நேரம் கிடைக்கையில் இவ்விடத்தின் கதவு எப்பொழுதும் திறந்தே இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றிகள் பல..

      Like

  1. Mano.. சொல்கிறார்:

    மிக்க நன்றி வித்யா. உங்களின் புத்தகம் படிக்கக் காத்திருக்கிறோம். வாங்கி படித்துவிட்டு விமர்சனம் எழுதுகிறேன். வாழ்த்துக்கள்!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி மனோ. எழுதுங்கள். விமர்சனம் மூலம் மட்டுமே நான் உங்களையும் என்னையும் எடைபோட்டும் சரிபார்த்தும் கொள்ள முடியும். என்ன எழுதினேன் என்பதை அறிந்தாலும் எப்படி எழுதப் பட்டுள்ளது எனச் சொல்லும் தராசு உங்களிடமே உள்ளது. காத்திருக்கிறேன். மிக்க நன்றி!

      Like

  2. Moorthy Anandan சொல்கிறார்:

    Hello..Mr.Vidyasagar..

    wish you many success and growth in this service of Tamil language and their men

    Regards…

    Moorthy Anandan-00965-65839700
    Sr.Engineer,MOI Project
    Kuwait.

    Like

  3. Mullaiamuthan. சொல்கிறார்:

    Mr.Vidhyasagar,

    Vanakkam.

    I like to get your books for my documents.kindly send.then i will send my books/magazine.

    Thank you.
    mullaiamuthan.
    34,Redriffe Road,Plaistow,London,E13 0 JX.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஐயா அவர்களுக்கு வணக்கம்,

      தங்கள் அன்பிற்கு நன்றி. முடிந்தவரை விரைவில் அனுப்பி வைக்கிறேன். சற்று கூடுதல் புத்தகமாக இருபத்தைந்தோ முப்பதோ அனுப்பினால் அங்கு விற்ப்பனைக்கு கொடுக்க இயலுமா. தமிழகத்தில் புத்தகம் படிக்கும் வழக்கமே மாறிவிட்டதை தாங்களும் அறிவீர்கள். ஐநூறு புத்தகம் இருபதாயிரத்திற்கும் மேல் செலவிட்டு அச்சடித்துள்ளேன். மிக அழகாக செய்யும் நோக்கம். அதற்குத் தகுந்த விற்பனை இருந்தால் தான் அடுத்தடுத்த புத்தகங்களை செய்ய ஏதுவாக இருக்கும். குறைந்தது இன்னும் பத்து புத்தகங்கள் போடும் அளவிற்கு எழுதியவை உள்ளது. புத்தக வருமானங்களை சுயசேவைக்கு எடுத்துக் கொள்ளும் நோக்கமும் அல்ல. பாதி அடுத்த புத்தகம் இடுவதற்கும், மீதி சமூக தொண்டிற்கும் எண்பது தான் முடிவு.

      இங்கு பணிபுரியும் இடத்தில் சில செல்வந்தர்கள் என் புத்தகங்களை அச்சு செலவேற்று செய்து தரவும் தயாராக உள்ளார்கள். எங்கள் பணி புரியும் நிறுவனமே செய்யும். அதில் எனக்கு உடன்பாடில்லை. நம் உழைப்பு நம் உழைப்பாகவே இருக்கவேண்டும் என எண்ணுகிறேன். எனவே அங்கு நண்பர்களுக்கோ அல்லது புத்தக கடைக்கோ கொடுக்க இயலுமாயின் தெரியப் படுத்துங்கள்.

      தங்களின் தொடர்பிற்கும் அன்பிற்கும் நன்றிகளும்.. தொடர்ந்த உங்களின் தமிழ் பணிக்கு வாழ்த்துக்களும் அறிவிப்பவனாய்..

      வித்யாசாகர்

      Like

  4. Makesh perumal சொல்கிறார்:

    Dear Vidyasagar,
    I am waiting to read the book.I am in Tirupur.How can i get the same.
    Thanks

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி திரு. மகேஷ் பெருமாள். நான் குவைத்தில் வசிக்கிறேன். புத்தகங்கள் கடைகளில் புழக்கத்திற்கு வந்து விட்டதென அறிந்தேன். நீங்கள் தமிழ் அலை ஊடக உலகத்தின் தோழர் இஷாக் (9786218777) அவர்களை சற்று எனக்காக அழைத்து பேசுங்கள். அவர் திருப்பூரில் விற்கும் இடமும் அல்லது புத்தகம் அனுப்பியேனும் தருவார். அல்லது முகில் பதிப்பகம், சூர்யா கார்டன், மாதாவரம், சென்னையிலும் புத்தகங்கள் கிடைக்கும். 044 – 25942837 அல்லது கலைவாணன் : 9791054452 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். அனுப்பித் தருவார்கள். படித்து விட்டு எழுதுங்கள். தங்களின் அன்பான மடலுக்குக் காத்திருக்கிறேன்..

      நன்றிகளுடன்..

      வித்யாசாகர்

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s