மாவீரர் நாள்!
இறந்தவர்களின் சமாதிகளை
நனைக்கிறது கண்ணீர்,
சமாதிக்குள்ளிருந்து எழுந்து
கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு
துப்பாக்கி தூக்கி
சல்லடை சல்லடையாக்கி
சிங்களரை விரட்ட
ஈழம் மீட்க
துடிக்கிறது கைகள்.
இயற்கையின்
கட்டுப்பாட்டிற்குள்
அடங்கி போனதால்
இனி புதியதாய் பிறக்க
திட்டமிடுகிறார்கள் போல்,
சமாதிகள்
அமைதியாகவே
காட்சியளித்தன.
வருந்தாதீர் உறவுகளே,
மாவீரர்கள் –
அன்றும் உறங்கவில்லை
இன்றும் உறங்கவில்லை
இறப்பு தொலைத்து பிறப்பார்கள்.
விடுதலைக்காய் உயிர்விட்ட
ஒவ்வொரு உடலின் துளி ரத்தமும்
உயிராய்.. தமிழை.. உணர்வாய்..
நமக்குள் கலந்து –
புதியவர்களாய் நம்மை
புதுப்பிக்கட்டும்.
வாருங்கள் புதியவர்களாய் புறப்படுவோம்
ஈழம் காப்போம்
பறக்கும் புலிக்கொடியின்
அசைவுகளில் வீசும் காற்றில்
மாவீரர்களின் ஆத்மா
அதன் பின் அமைதியுரட்டும்;
அதுவரை போராடுவோம்!
————————————————————-
வித்யாசாகர்