இன்னுமொரு குரங்கின்
மனோபாவத்திலேயே
பரிமாண வளர்ச்சி பற்றி
பேசியும் எழுதியும் கொள்கிறான்
மனிதன்.
இரண்டில் எது சரி
என்று யோசித்த இடைவெளியில்
எத்தனை மனிதர்களை
இழந்து விட்ட
இனம் நம்மினம்.
இன்று ஏதோ ஒன்று
முடிந்துவிட்டதாய்
என்னவோ தன்னால்
நடந்துவிட்டதாய் –
பிணங்களின் மண் மூடிய
தரையில் அமர்ந்து,
அடிமை சிறையில் அகப்பட்ட
எத்தனையோ தமிழர்களின் வலியை சுவாசித்து,
தன் தேசம் தேடி தேடியே
வாழ்நாளை தொலைத்த
பலருக்கு நாம் பொறுப்பல்ல
என்று திரியும் ஒரு
உத்தம மனிதர்கள் நாம்.
உயிர் சேதம்
எங்கு நடந்தாலும்
இழப்பு இழப்பு தான்
உயிர் உயிர் தான்;
என்றாலும் எதற்கான இந்த
போராட்டம்???
ஏனிந்த ஈழ வேட்கையென
சிந்திக்கும் அவகாசத்தை
ஏனோ அதிகம் பேர் தொலைத்துவிட்டோம்.
காற்றின்
நெருப்பின்
தண்ணீரின்
சுதந்திரம் இல்லாவிட்டால் பரவாயில்லை.
மரத்தின்
விலங்குகளின்
ஏன், ஒரு ஜடப் பொருளுக்குரிய
சுதந்திரம் கூட –
ஒரு தமிழ் இனத்திற்கு
முழுதாய் இல்லாமல் போன அவலம்
நமக்கு இன்னும் புரிபடாமல் போனதே
ஒற்றுமை குளைவின்
முதல் புள்ளியானது.
இன்று, புள்ளிகள் பெருக்கெடுத்து
ஜாதி.. மதம்.. ஏற்றத்தாழ்வு..
பதவி.. பேராசையென
அறுபட்டுக் கிடக்கிறோம்.
நம் அறுபட்ட விரிசல்களில்
கொடி நாட்டி, சிங்களன்
போர்வீரனானான்;
நாம் தீவிர வாதியானோம்.
இனி,
ஒன்றுபட்டு என்ன செய்துவிட என்று
யாரேனும் கேட்டுவிடாதீர்கள்.
தமிழன் ஒன்று பட்டால்
தரணி தலை கீழ் நிர்கவேண்டுமெனில் நிற்கும்
திரும்பிப் பாரேனில் பார்க்கும்.
பிறகென்ன –
ஒன்று பட்டு வாருங்கள்
ஈழத்தை இதோ இப்போதே
பரித்துவிடுவோம் என்றால் சாத்தியமா???
ஆம்; இல்லையை
அகற்றிப் போடுங்கள்.
நாடு இழந்து
வீடு இழந்து
உறவுகளை இழந்து
நோய்வாய் பட்டு
இறக்கும் தருவாயிலும்
இனமானம் காக்கப் போராடத் துடிக்கும்
அந்த ஈழ மக்களை பற்றி சிந்தியுங்கள்.
வன்னிப் போரில்
முல்லைவாய்க்கால் போரில்
இந்த அறுபது வருட காலத்தில்
இழந்த இழப்பை
ஒருதுளியும் –
யாரும் மறந்துவிடாதீர்கள்.
ராஜபாட்டையில் மிடுக்காய் நடந்த
தமிழினம் – இன்று
விமான நிலையத்தில்
கிடைத்த உடுப்பை உடுத்தி
கிடைக்குமிடம் தேடி
அலையும் உயிர் பயம்
எத்தனை வேதனைக்குரியது என்பதை
கவனத்தில் கொள்ளுங்கள்.
மூக்கு சதை கிழிந்து,
கைகால்கள் நொறுங்கி,
ஈ மொய்க்க மொய்க்க
அருகருகே கிடத்தப் பட்ட
இறந்தவர்களுக்கருகே படுத்துறங்கிய,
காகிதமாய் கொட்டி எரித்த பலரை
கண்ணெதிரே பார்த்து பார்த்து
உயிர் போகும் வலியில் துடித்த
லட்சாதி லட்ச உறவுகளுக்காய்
ஒரு சொட்டு கண்ணீர் வேண்டாம்
வேறென்ன செய்யலாமென சிந்தியுங்கள்.
தமிழருக்கான ஒரு தேசத்தை
கனவு காணுங்கள்.
மீண்டும் மலரும் தமிழீழத்தில்
இறந்தவர்களின் சமாதி தாண்டி
மிட்சம் மீந்தவர்களையாவது
வாழவைப்போம்.
தமிழரின் வாழ்வை
ஈழத்தினால் –
உலகிற்கு போதிப்போம்!!
——————————————————————
வித்யாசாகர்
நம் இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய சிந்தனை தூண்டல். நன்றி அண்ணா.
LikeLike
நம் சிந்தித்தலில் பொங்கியெழும் உணர்வுகளின் ஒட்டுமொத்த பலத்தில், நாளை நிறைய பேருக்கான விடியல் கிடைக்கலாம் சகோதரா. சிங்களன் கையில் இருப்பதால் தமிழர்கள் நாம் இத்தனை அவதியுறுகிறோம். இதே நம் கையில் அவர்கள் இருந்திருந்தால் அத்தனை பெரிய ஜாம்பவானை போல மிடுக்காக சுதந்திரப் பறவைகளாய் திரிந்திருப்பார்கள். அது, வந்தவரை வாழவைக்கும் தமிழரின் பெருமிதம் போல், போகட்டும்;
நமக்கு சிங்களரின் ஆட்சி பீடம் வேண்டாம், நமக்கான ஒரு கூடேனும் போதும். அந்த நமதென்னும் சுதந்திரத்தில்; இத்தனை காலம் சிந்திய ரத்தங்களுக்கான காரணத்தை – உலகிற்கு – பிறகு புரிய செய்யலாம் சகோதரா. வருகைக்கு மிக்க நன்றி.
LikeLike
தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தால் ஈழ தமிழர்க்கு நிச்சயமாக ஒரு விடிவுகாலம் பிறக்கும்.
உக்கள் தம்பி
சி.ராஜசோழன்
LikeLike
மிக்க நன்றி சோழா. உங்கள் நம்பிக்கையில் தான் நானும் நமை போல் கோடான கொடி பேரும் நினைக்கிறோம். அந்த நினைப்பு மொத்த தமிழர்க்கும் எழும் நாள் “தமிழீழம் மூலம்” தமிழன் தன் காலரை தூக்கிவிட்டுக் கொண்ட நாளாக வேண்டுமெனில் பதிந்து கொள்ளலாம். பார்ப்போம் காலமும் நம் உறவுகளும் காட்டும் அக்கரைக்காய் காத்திருந்து தானே ஆகவேண்டும். மிக்க நன்றி ராஜராஜ சோழன்!
LikeLike