குச்சி மிட்டாய்
காட்டுகலக்கா
கைவிரல் அப்பளமென்றால்
உனக்கு கொள்ளை இஷ்டம்,
கடைக்கு போகும்போதெல்லாம்
கேட்பாய்,
வாங்கிக் கொண்ட கணம்
துள்ளி ஒரு குதிகுதிப்பாய்
குதூகலத்தில் கைதட்டி சிரிப்பாய்
அந்த சிரிப்பை காண்பதற்காகவே
சிலநேரம் –
அவசியமின்றி கடைக்குப் போவேன் நான்!
//அந்த சிரிப்பை காண்பதற்காகவே
சிலநேரம் –
அவசியமின்றி கடைக்குப் போவேன் நான்//
hahah..
nice!
மிக்க நன்றி நண்பரே..
குழந்தைகளின் சிரிப்பும் ஆர்ப்பரிப்பும் காணக் கான சுகம் தானே பெற்றோருக்கு. எங்களுக்கு முகிலின் சிரிப்பும் சந்தோசமுமென்றால் கண்டுகொண்டே இருக்கத் தோன்றும்! அந்த உணர்வுகளே கவிதைகளாகின்றன!