இரண்டற கலக்காத நெஞ்சில்
வஞ்சமற்று வாழ்கையில்,
கெடுத்தவனை
திருத்த முயல்கையில்,
அடித்தவனை
திருப்பி அடிக்கவும் –
அணைக்கவும் முடிகையில்,
அன்புருதலில்,
இல்லாதாரிடம்
இருப்பதில் –
இயன்றவரை பகிர்ந்து கொள்கையில்,
இருப்பவரை கண்டு
ஏங்கி நிற்காமையில்,
எத்துணிவு பெற்றும்
பணிவுருகையில்,
பணிபவரை
மதிக்க கற்கையில்,
மதியாதாரை
புரிந்து கொள்கையில்,
தவறென்று கண்டால்
பொங்கி எழுகையில்,
தன் தவறாயினும்
திருத்திக் கொள்கையில்,
எவருக்கும்
அஞ்சாதிருத்தலில்,
எல்லாம்
வெல்லத் துணிகையில்,
எதையும் செய்துதீர்க்க
நம்பிக்கை கொள்ளுதலில்,
தோல்விக்குக் காரணம்
‘தானே’ யென்று உணர்தலில்,
மீண்டும் மீண்டும்
முயற்ச்சி செய்தலில்,
பிறரையும்
நம்புதலில்,
எவரையும்
துச்சப் படுத்தாமையில்.
வென்றவரை
போற்றி மகிழ்தலில்,
பொறாமையை அறவே அறவே
ஒழிக்கையில்,
போதுமென
நிறைதலில்,
ஏற்றத் தாழ்வினை
ஏற்படுத்தாமையில்,
போதை
ஒழித்தலில்,
பொய்யின்றி
வாழ்தலில் –
உண்மை ஒளிவட்டமாகும்
மரணம் மீட்கப் படும்!
மரணம் போகட்டும்
மனிதமாவது மிட்சப் படும்!
——————————————
வித்யாசாகர்
இப்போ என்ன சொல்லவர்றே?
LikeLike
சிந்திக்க சொல்றேன். பிறர் நலம் காக்கையில் தன் நலம் காக்கப் படும் என்கிறேன். வாழ்வின் அளவு இவ்வளவு தானெனும் பட்சத்தில் அதை ஒழுக்கமாய் வாழ்வோமே என்கிறேன். ஒழுக்கம் என்றால்; இதலாம் இருக்கலாமோ என்கிறேன். ஒழுக்கம் மீறி இப்படியெல்லாம் நடக்கிறதே என்கிறேன். இதற்கெல்லாம் யாரும் பொறுப்பல்ல எல்லாம் நன்மைகளும் தவறும் நம்மிடமிருந்தே நடக்கத் துவங்குகிறது; அதற்க்கு வழி ஏற்படுத்தித் தராதீர்கள் என்கிறேன். இருப்பதில் இன்பம் காணுங்கள் என்கிறேன். பிறரை கண்டு பொறாமை கொள்ளாதீர்கள் என்கிறேன். தன் மேலும்; தன் மேலுள்ள நம்பிக்கையை பிறர் மேலும் கொள்ளுங்கள் என்கிறேன். இறக்கையில் ஒரு பிடி மண் கூட, உடன்-வராத வாழ்க்கையின் தீர்வில்; பிறருக்கு பாரமாக இருப்பானேன் என்கிறேன். மீறி எத்தனை திருத்தி ஒழுக்கமாக, கண்ணியமாக, நலமாக வாழ்தலில் மரணம் சற்று தூர நீங்கி போனாலும்; என்றேனும் ஓர்தினம் இறப்பவர் தானே நாம் எல்லோரும்???? அப்படி இறப்பினும், இவர் இப்படி உயர்வாக வாழ்ந்தாரே அப்படி நானும் உயர்வாய் வாழ்ந்து காட்டுகிறேனென்ற மனிதம் மிக்க எண்ணம் அவருக்குப் பின் வாழ்பவரோடு மிச்சப் படுமே, அப்படி வாழ முற்படுங்களேன் என்கிறேன். இப்படி இன்னும் ஆயிரமாயிரமிருக்க அதை பற்றி எல்லாம் சிறிதேனும் சிந்திக்க ஒரு சின்ன வாய்ப்பேற்படுத்தித் தரும் நோக்கமே இதுபோன்ற கவிதைகள் தோழர்.
படைப்பில் வழி காட்டுமளவு நான் எப்பக்குவம் பெற்றுள்ளேன்; வழியை சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பதே என் கடன். தீர்வு சொல்லும் அளவுக்கு வாழ்வு பூரணம் பெறாத நான் எதற்கு தீர்வு கண்டு சொல்வேன் தோழர். தீர்வை என்னை காட்டிலும் நீங்கள் சரிவர சிந்தித்துக் கொள்ளலாம்; தீர்விற்கு சிந்தியுங்கள் என்பதே எழுதுபவர் கடனென்று எண்ணுகிறேன்.
எழுதுவது வெறும் ஆறுதலுக்கல்ல, இது இரவை விற்று பகல் வாங்கும் வேலை. தன் அனுபவம் தனக்கு பின்னே வருபவர்க்கு உதவுமோ என விட்டுச் செல்லும் உழைப்பு. முன்னே செல்பவர் செல்லுங்கள். உங்களுக்கு எழுத எனக்கு அருகதை இல்லை என எண்ணிக் கொண்டு போகிறேன் தவறில்லை. தாங்கள் உணரும் உணர்வை ஒரு வாசகனாக உணர்ந்த பின்னே ‘இதையும் ஒரு எழுத்தென்று’ இங்கே பதிவு செய்கிறேன். பதிந்ததின் தரம் என்னவோ; பதிந்ததின் நோக்கம் எனை கவிஞனாகவும், இதை கவிதையாகவும் பறைசாற்ற அல்ல, இதன் ஏதேனும் ஒரு வரி எவரேனும் ஒருவர் மனம் புகுந்து ‘நல்லதை பற்றி சிறிது சிந்திப்போமே’ என கெஞ்சாதா என்பதன்றி வேறில்லை தோழர். வருகைக்கும், தங்களின் கேள்விக்கும் மிக்க நன்றி திரு. ஜிங்கா!
LikeLike
நல்ல கவிதை வித்யா. வரிக்குவரி வாழ்விற்கான சேதி சொல்லும் கவிதை. படிப்பவர் புரிந்துக் கொள்வதில் இருக்கிறது. எனக்குப் புரிகிறது..
LikeLike
மிக்க நன்றி மாதவன். படிப்பவர்களுக்கான கருத்து சுதந்திரம் என்று ஒன்றுண்டு. படிப்பவை பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் அவரவர் உணரும் உணர்வை பொருத்தும் ரசனை பொருத்தும் இருந்தாலும்; ஒருவர் மறுப்பதால் மறுக்கப் பட்டவரின் கூற்று சரியென்றும் தவறென்றும் அர்த்தமும் இல்லை. ஏற்க தக்கதை ஏற்றுக் கொள்வோம், மறுக்கவேண்டியதை எவர் கூறினும் நிராகரிப்போம்!
LikeLike
மாதவன் சரியாக சொன்னார் அண்ணா. நல்ல கவிதை. நீங்கள் தொடருங்கள். உங்களின் கவிதைகள் என்னை போன்றோரிற்கான வழிகாட்டல் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களின் கவிதை இல்லாத நாள் எங்களுக்கு நிலவில்லாத வானம் போல என்பதை தெரியப் படுத்துகிறேன் அண்ணா
LikeLike
மிக்க நன்றி முரளி. தங்களின் அதீத அன்பு தங்களின் பின்னூட்டத்தில் தெரிகிறது. அந்த அன்பிற்காகவேனும்; இயன்றவரை எழுதிக் கொண்டே இருக்க முயல்வேன், ஆயினும்; கருநீலம் ஒரு பார்வையில் கருப்பென புரியும். கரும்பச்சை ஒரு பார்வையில் கருப்பென தெரியும். கரும் ஊதாவும் ஒரு பார்வையில் கருப்பாகவே தெரியும். அவைகளை சரியான கருப்பிற்கும் வெள்ளைக்கும் இடையே வைத்து நோக்குகையில் உண்மை நிறம் தெரியவரும். தெரிதலுக்கும் புரிதலுக்கும் தூரமுண்டு முரளி. நாமெல்லாம் நிலவல்ல; நிலவையும் தாண்டி நிறைய சூரியன்களே இருக்கிறார்கள்!
LikeLike
கவிதை நல்ல கவிதை என்பதில் ஐயமில்லை, மறுமொழிகள் அதைவிட அருமை வித்யாசாகர் அவர்களே.
கல்யாணி.K
LikeLike
சற்று இடைவெளிக்குப் பின் வருகிறீர்களோ தோழி. மிக்க நன்றி. இதை முதலில் நான் ‘தமிலிஸ்ஸில்’ பதிகையில் கவிதை என்றே வகை பிரிக்கவில்லை, சிந்தனை என்று பதித்துள்ளேன் கீழேயுள்ள அந்த ‘இணைப்பை’ சொடுக்கிப் பாருங்கள்.
http://tamilish.com/Sinthanaigal/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-1/
ஏதோ தோன்றியது, சரி இலகுவான வரியாக இருக்கட்டும், படிப்பவர் மனதில் ஒன்றிரண்டேனும் நிற்குமே என்றே எழுதினேன். பிறகும் பதிவோமா வேண்டாமா என்றும் யோசித்தேன், பிறகு; சரி நம் கவிதைகளை எடுத்து நடக்கும் உடன்பிறவா தம்பிகளும் உள்ளார்களே பதிந்து தான் வைப்போமே என்றே மீண்டும் பதிய முயன்றேன். வேறு வகையை நம் கட்டுப் பாட்டகத்திற்குள் உருவாக்க போதிய நேரமின்மையால் கவிதைக்குள் பதிந்தேன். அதற்கென என் படைப்புகளை நான் கவிதை என்றெல்லாம் பரிந்துரைத்துக் கொள்ள முன்வரவில்லை கல்யாணி. தங்களின் வாசிப்பிற்கும், தொடர்ச்சியான நம்பிக்கையூட்டலுக்கும் மிக்க நன்றிகள் உரித்தாகட்டும்!
LikeLike
//பொறாமையை அறவே அறவே
ஒழிக்கையில்,
போதுமென
நிறைதலில்//
மரணத்தை மீட்டெடுப்போம்…..
இந்த கவிதையில் உள்ள எல்லா வரிகளும் அருமை அருமை.. கருத்து செரிவு நன்றாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது…
LikeLike
வாழ்வின் தரம், விருப்பத்தில் புரிபடுகிறது. இக்கவிதை மன்னிக்கவும் இந்த கூற்று பிடித்ததற்கான காரணம் தங்களின் நல்ல எண்ணங்களின் காரணம் என்றும் கொள்ளலாம் விஜய். மிக்க நன்றி!
LikeLike