தெருக்களில் –
எத்தனையோ வாகனங்கள்
தரையை கிழிக்கும் விதமாய்
சீறிப் பறக்கிறது,
யாருக்கு என்ன அவசரமோ??
எந்த வண்டி
விமானத்தின் கடைசி நிமிட துளிகளின்
அவசரத்திற்காய் போகிறதோ,
எந்த வண்டியில்
ஒரு சகோதரி
பிரசவ வலியால் துடிக்கிறாரோ??
எந்த வண்டி
இண்டர்வியூ முடியும்
கடைசி தருவாய் நோக்கி விரைகிறதோ,
எந்த வண்டியில் மரணம் நெருங்கும்
யாரோவை –
உயிர் காக்கும் நேரம்
நிமிடங்களாய் கரைய
எப்படியேனும் விரைந்து சென்று காப்பாற்றலாமெனப்
போகிறதோ…
யாரறிவார்..
யாரறிவார்..
எல்லாம் கடந்தும்
எதிரே வேகமாய் வரும் வாகனம்
கண்டால் –
வழிவிடாமல் நின்றும் –
சின்ன சின்ன தவறுகளுக்குக் கூட
பெரிதாய் வருத்தப் பட்டு
கோபப் பட்டு
இரத்தம் சூடாகி –
போறவன் அப்படியே சாவறானாப் பாருன்னு
நிறைய பேர் மனசு
நினைக்காமலில்லையே!
நாலும் வாழும் காட்டின்
எட்டும் திரியும் தெருவில் தானே பயணிக்கிறோம்..,
எவர் இப்படி இருந்தால் என்ன
நம்மை நாம் சமாதனப் படுத்தி
கவனமாக ஓட்டும் நேர்த்தியில்
ஏதேனும் –
ஒரு விபத்தையாவது –
தவிர்க்காமலா போய்விடுவோம்?????
கண்டிப்பாக தவிர்ப்பார்கள் இந்த கவிதையை படிக்கும் நபர்கள்; என்னையும் சேர்த்து..
LikeLike
மிக்க நன்றிடா செல்லம்மா..
‘ஒரு சமூகம் பற்றி நம் வீட்டிலிருந்தே தெரிந்துக் கொள்ளலாம்; அதுபோல், ஒரு சமுகத்தின் மாற்றம் தன் வீட்டிலிருந்து நிகழ வேண்டும்’ என்பார்கள்!!
LikeLike
கவிதைகள் அருமை…
LikeLike
மிக்க நன்றி தோழர். இணையத்தில் தமிழ் வளர்க்க எண்ணற்றோர் குவிகிறார்கள்; வட தேசத்தில் தமிழ் வளர்க்க உங்களை போல் ஒரு சிலர் தானே மிஞ்சுகிறீர்கள். தொடரட்டும் உங்களின் தமிழ் பணி தோழர்..
LikeLike