உள்ளூர் நெரிசல்களை தாண்டி
நெடுஞ்சாலைகளில்
அதிவேகமாய் பயணிக்கும்
வாகனங்களுக்கிடையே
அறியாமல் ஓடிவரும் சிறுவனை
எந்த பிரேக்கும்
சாமியும் –
காப்பாற்றிவிடுவதில்லை;
இரத்தம் மட்டும் –
காண்பவரின்
இதயத்தை நனைத்துவிட்டு
வாகனங்களின் வேகத்தில்
காய்ந்தேவிடுகிறது!