எத்தனையோ
ஆனந்தாக்கள் –
நம்மை சீர்குலைத்து
பாடம் புகட்டுகிறார்கள்;
நிறைய வங்கி
கொஞ்சம் கொஞ்சமாக
நிறைய வாங்கிக் கொண்டு
நமக்குக் –
கொஞ்சம் தருகிறது;
வேளைக்கு சம்பளமும்
வாங்கிக் கொண்டு –
வேலையையும் முழுதாக செய்யாமல்
மேலே லஞ்சமும் வாங்கி
பின்பும் நாலுமுறை இழுக்கடித்து செய்து
எவனோ கால் மேல் கால் போட்டு
அமர்கிறான்.
இதெல்லாம் தெரிந்தும் நாம்
அவனிடம் கைகட்டியே நிற்கிறோம்;
காலக் கொடுமை…,
எதேவேண்டுமாயினும் இருந்து விட்டுப்
போகட்டும்,
நம் கண் மறைத்து உலகில்
ஒன்றுமே நிகழ்வதில்லை என்பதை
புரிந்து –
தவறு செய்பவனை சட்டை பிடித்து
இழுக்காத வரை –
நம் ஆண்மை கைகட்டிக் கொண்டும்;
எவன் காலோ இன்னொரு கால் மேல்
இட்டுக் கொண்டுமே இருக்கும்!!
//தவறு செய்பவனை சட்டை பிடித்து
இழுக்காத வரை –
நம் ஆண்மை கைகட்டிக் கொண்டும்;
எவன் காலோ இன்னொரு கால் மேல்
இட்டுக் கொண்டுமே இருக்கும்!!//
really super. i enjoyed all lines.
LikeLike
உங்களை போன்றோர் படித்தாலே போதும் என்று எண்ணுகிறேன்…, ரசித்தீர்களா???
உங்களின் ரசனையில் சிலிர்தெழட்டும்; சமூகத்தின் சீர்திருத்தங்கள் மிக சீரிய எழுத்துக்களாய்.. உறவே, மிக்க நன்றி!
LikeLike