குடிப்பவன் குடிக்கிறான்
நல்லவனென நடிப்பவன்
நடிக்கிறான்,
இருப்பவனின் நாற்றம்
வெளியில் தெரிவதில்லை.
இல்லாதவனின் நாற்றம்
பெரிது படுத்தப் படுவதில்லை.
இரண்டுக்கும் மத்தியில்
பண்பாடு குலைகிறது
அநாகரிகம் கூட
நாகரீகமென மெச்சப் படுகிறது;
காலமாற்றம் என்னும் ஒற்றை
பெயரில் –
நிறைய பேர்
தவறாகவே பதியப் பட்டிருக்கிறோம் –
கால ஏட்டில்!!
நல்ல கவிதை..
LikeLike
மிக்க நன்றி அருள்..
நம் ஓரிரு கவிதைகள் என்ன செய்துவிடும் அள்ளிக் குவியும் தமிழ் களஞ்சியமென நீங்கள் நடத்தும் வலைதளத்தின் முன்..
தொடர்ந்து அக்கப் பூர்வமான கருத்துக்களை இன்னும் பதிந்து, முன்னிலை கொள்ளாவிட்டால் பரவாயில்லை, தன்னிலை கொள்ளுங்கள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..
LikeLike