மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (42)

ரு லட்சமாம்
இரண்டு லட்சமாம்
கணக்கு சொல்கிறது செய்தி
முல்லைவாய்க்காலில் இறந்தவர் பற்றி;

கணக்கில் வராது இறந்து போன
எத்தனயோ உயிர்களுக்கென்ன
இன்னொரு பிறப்பையா
திருப்பித் தந்துவிடுமிந்த தேசங்கள்????

ஓஹோ; தமிழரை
உயிர்கணக்கிலிருந்து
தள்ளிவைத்துவிட்டார்கள் போல்
சிங்களன் வெல்லும் வரை; பாவிகள்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (42)

  1. Ratha சொல்கிறார்:

    இங்கே ஒரு பாடல் வரி 90′ களின் ஆரம்பத்தில்
    “இமைய நாடு உந்தனுக்கு குழி பறித்தது, உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதை பதைக்குது..”
    இன்று 2009ல் ஒருவருக்கல்ல ………………????

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம், ராதா.. இறந்தவர்களின் மேல் நின்று கொண்டு தான் ஜனநாயக பிரச்சாரம் செய்கிறது சில நாடுகள். தன் கடை கண் காட்டியிருப்பின் கூட எத்தனையோ உயிர்கள் நன்றி நினைத்து இன்று உயிர் வாழ்ந்திருக்கும், அதையும் விடுத்து மறைமுக உதவி புரிந்து தமிழர் இனம் அறுக்க தானே முனைகிறது இந்திய தேசமும். எவர் குற்றம் என்று எவரை கைகாட்ட? இல்லை என்று யார் வேண்டுமாயினும் சுலபமாய் விலகிக் கொள்ளலாம், இழப்பின் கணம் ஈழத்திற்கு தானே; இல்லை என்போருக்கில்லையே..

      Like

  2. கமல் சொல்கிறார்:

    நண்பா எங்களின் வலி கலந்த வாழ்க்கையினைக் கவிதையாக வடித்துள்ளீர்கள். அனுபவித்த எங்களை விட எம் அயலூரில் நீர் இருந்து அருமையான வார்த்தைகளால் வலிகளை உலகறியும் வண்ணம் கவிதையாக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் தோழா. இன்று தான் முதன் முதலில் தங்களின் இணையத் தளம் வந்தேன். இனித் தொடர்ந்தும் வருவேன். பிஞ்சென்ன, பூவென்ன, முதியவர்களென்ன இறப்பதெல்லாம் தமிழர்கள் என்பது தானே அவர்களின் ஏகாந்தம்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் கமல், என் வட்டமும் தமிழரென்ற ஒன்று தான், அதையும் மீறி அநீதியில் ஒரு இனம் அழிவதை கண்டு தடுக்க துணியாத எனக்கு எழுதுகோல் இருந்து என்ன பயன். ஆடுபவன் ஆடட்டும், அவனின் ஏகாந்த கொட்டம் அடங்கும், அவன் எப்படி போயினும் நம் நீதிக் கொடி ஓர் தினம் பறக்கும். தவறு செய்பவர் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டுமென்பது இயற்க்கை நியதி. தவறுகள் ஓர் தினம் தண்டிக்கப் படும் நாளில் நமக்கான தீர்ப்பு ஈழமாகும் கமல்.

      யாரை தண்டிப்பதை காட்டிலும்; நம் தேசம் மீட்டு விடுதலை காற்றை சுவாசிக்கும் நாளே நமக்கான நாள். அதற்காக காத்திருப்போம், உங்களின் உடன் இருந்து என் மக்களுக்காய் போராடத் தான் என்னால் இயலவில்லை. அதன் வேட்கையையும் ஓர் தின வெற்றிகான நம்பிக்கையையும் எழுத்தால் தர முடியுமெனில்; அதை விட வேறென்ன என் எழுத்திற்கான அவசியமாக இருந்துவிடும்.

      வரும் பதினெட்டு வரை நிறைய கவிதைகள் ஈழம் பற்றித் தான் பதிய உள்ளேன், நேரம் கிடைக்கையில் படித்துவிட்டு பதிவிடுங்கள், உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள். இனி என்ன செய்ய வேண்டுமென்பதில் மட்டுமே நம் கவனத்தை செலுத்த முனைவோம். நாளைய வரலாறுகளில் வெற்றிகள் சுலபமாய் பதிந்து போய்விட வேண்டாம் நம் வலிகளும் பதிந்திருக்கட்டும் என்பதே என் நோக்கமும்!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s