கொள்ளு தாத்தா – பாட்டிக்கு,
பாட்டி – அம்மாவுக்கு,
அம்மா – எனக்கு,
நான் – என் பிள்ளைக்குன்னு
விக்கல் வரும்போதெல்லாம்
தலையில பூ சுத்திவைப்பதை விட
ஏன் எனக் கேட்டிருந்தால் –
என்னைக்கோ விக்கல் ஒரு தேக்கரண்டி
தண்ணியில நின்னு போயிருக்கும்;
நாம ஏன்னும் கேட்கல
ஒரு தேக்கரண்டி தண்ணியும்
கொடுக்கல –
நாளைய தலைமுறை வரை
தலையில் பூவைக்க சொல்லிகொடுத்து
காதுல பூ மாட்டி அலைகிறோம்!!