முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல – ஈழம்!
காற்றின் அசைவுகளில்
ஏக்கமாகப் படிந்த கறையது
ஈழ விடுதலை;
ஈழவரலாற்றில்
ரத்தத்தால் தொய்ந்த பகுதி
முள்ளிவாய்க்கால்!
அழகிய ஆனந்தபுரத்தை
சுடுகாடாக்கி –
சமாதியின்றி பல போராளிகளை
செய்திக்கு – மரணப் படையலிட்ட பெருந் துயரம்
முள்ளிவாய்க்கால்!
சதைகிழிந்து
உறுப்புகள் சிதறி
உடல் துண்டிக்கப் பட்டு
அரை உயிரில் மிச்சப் பட்ட இனத்தையும்
ஈ மொய்த்து நோய் தின்ற கொடுமை
முல்லிவைக்கால் கொடுமை;
போர் கடந்து
போர் முறை கடந்து
கர்ப்ப வயிறு கிழித்து
முதியோர் கால்கள் நறுக்கி
அப்பாவிப் மக்களையும்
போராளிகளையும்
எம் தலைவர்களையும்
சிங்களனின் கோழைத் தனத்தால்
சதியில் வீசிய நச்சுக் குண்டினால்
கொன்று குவிக்கப் பட்ட வன்முறை கொடுமை
வேறெங்கு நடந்திருக்குமோ தொழர்களே;
கூடின்றி – பறந்து பறந்தே
கால்கள் ஒடிந்தும் –
இறக்கம் சுரக்கா இதயமென்ன
இரும்பாலானதோ சிங்களனுக்கு?
தமிழனுக்கு தனிநாடு கிடைப்பதில்
என்ன தகராறோ பிறத்தானுக்கு??
தட்டிப் பறிக்க துணிந்த போது
தீவிரவாதி பச்சை குத்திய
நீதிபதிகளுக்கு –
என் சகோதரிகளின் கற்பு
காற்றில் பறந்தாலென்ன;
கடையில் விற்றாலென்ன ‘என்றானதோ??
பார்வை முழுக்க மரணத்தையும்
நினைவு முழுக்க துரோகத்தையும்
வாழ்க்கை முழுக்க –
இரண்டாம் பட்ச இனமாய் வாழும் வலியையும் கொண்ட
எம் – தமிழன் என்றாலே தீண்ட தாகாதென்று
த்தீக் – கங்கெனக் கனன்ற சிங்களருக்கு
துணை போன தேசங்கள் எம் தமிழரிடம்
என்ன பகை கொண்டதோ???
லட்சாதி லட்ச உயிர்களை ஒருவன்
கொன்று குவிக்கையில் – எதிர்த்து
நிறுத்த இயலா உலக நாடுகளுக்கிடையே –
‘உயிர்பிச்சை கேட்டு சமாதனம் செய்ய வந்தவனை’
வலுவேத்தி ஆயுத உதவி புரிந்த
தோழமை தேசம் எந்தெந்த தேசமோ; தெரியவில்லை;
கரை உடைந்தோடிய
ரத்தக் காட்டாறும்,
எரிந்து சாம்பலான
உடல் புகுந்த நெருப்பின் வீச்சும்
தனை சுட்டிடாத – மமதையில்
நீதியுரைத்த மானுடமே……
மனிதமற்றுப் போனாயோ நீ????
போகட்டும் –
கண்ணீரில் மையெடுத்து –
வெறும் கவிதையெழுதும் தருனமில்லையிது தோழர்களே..
இரத்தத்தில் உணர்வூட்டி
முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்றடிக்கும்
பறையிது உடன் பிறப்பே;
குட்ட குட்ட குனிபவனல்ல
தமிழன் –
தருணம் காத்து உயரத்தில்
எட்டிப் பறக்க இருக்கும் வீர ஜாதி –
எம் ஈழ ஜாதி!
கை கோர்தத் தேசமெல்லாம்……………
(எமை வேரறுக்க) கைகோர்த்த தேசமெலாம் –
என்ன சதி தீட்டுமோ தீட்டட்டும்
அதையெல்லாம் உடைத்தெறிந்து – ஈழம்
வெற்றிமுரசு கொட்டும் நாள் –
வெகு தொலைவிலில்லை தோழர்களே!
ஈழமென்ன வெறுங் கனவா?????
ஈழமென்ன வெறுங் வெற்றுக் கனவா –
நாலு நச்சு குண்டில் – மாயும் சமாதியடைய?????
ஈழம் எம் விடிவு;
ஈழம் எம் வேட்கை;
ஈழம் எம் மூச்சு;
ஈழம் எம் விடுதலை;
ஈழம் எம் தேசம்;
எம் இரத்தம் சொறிந்த மண்ணின் தாகம் – ஈழம்!
முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல தோழர்களே!
————————————————————————————————
வித்யாசாகர்
முதல் வருகை.
வணக்கம், தங்களின் முதல் வருகையை.. பெரும் வருகையென எண்ணி மகிழ்கிறேன்..
என் தளம் வந்த உம்மை அறிய யார் இந்த வித்யா என்று உம் தளம் நோக்கினோம் ஐயா. ஆஹா!!! எவ்வளவு அழகான எழுச்சிக்கவிதைகள், மனதின் குமுறல்கள், உட்ப்புற உரசல்களின் கிறுக்கல்கள். எம்மை உந்தன் வாசகன் ஆக்கிவிட்டீர் ஐயா! நன்றிகள் கோடி உன் அறிமுகத்திற்கு… உன் பயணம் சிறக்க இந்த அன்பனின் வாழ்த்துக்கள் மனதின் ஆழத்திலிருந்து!
மிக்க நன்றி மறவன். நம் கடன் எழுதுவது என்பதை மட்டுமே மனதில் கொள்வோம், வாய்ப்பிருப்பின் அடிக்கடி வாருங்கள். தங்களை போன்றோரின் விமர்சனங்கள் நம் பயணத்திற்கு பலமாக இருக்கட்டும்! வாழ்க; வளர்க!
அருமை வித்யா அருமை
மிக்க நன்றி தோழமையே. எத்தனையோ பேரின் மனக் குமுறல்கள் ஒரு புறமிருக்க, அவைகளை தாண்டி ஏதோ முடிந்துவிட்டதாகவும், ஈழம் தோற்றுவிட்டதாகவும் முல்லிவைக்காளோடு நம் முயற்சி வீழ்ச்சி பெற்றதாகவும் ஒரு சிலரின் சிந்தனை நிலவுகிறது, அதை மாற்றி இனியும் என்ன செய்வோம் என் இனத்திற்காய் என்ற முனைப்பை எல்லோரும் பெறவே இப்பதிவு.
நமக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளில் புடம் போடப் படுவோம், இழைக்கப் பட்ட அநீதியின் கோபத்தில் கனல் போங்க வீரியம் கொள்வோம், தோற்றான் தமிழன் என்பதை ஒருபோதும் வரலாறாக்காது வென்றான் ஈழமென ஓர்தினம் வெற்றிக் கொடியை பறக்க விடுவோம்!
“த்தீக் – கங்கெனக் கனன்ற சிங்களருக்கு ”
இந்த வசனத்தில் ஏதும் எழுத்துப்பிழை இருக்கிறதா அண்ணா சரியாக எனக்கும் தெரியவில்லை. அது சரி என்றால் எனக்குப்புரியவில்லை சற்று விளக்கம் தாருங்கள் அண்ணா
வணக்கம் பா..,
நலமா ரூபன், அது வேறோன்ருமில்லைப்பா, அது ஒரு நெருடிய.. தாங்க இயலா உணர்ச்சியை மேலிட்டுக் காட்ட அப்படி எழுதி இருந்தேன். தீ கங்கு.. இல்லையா சிவந்து கனன்று நிற்கும் நெருப்பு. அதை சற்று கோபத்தில் அழுத்தி “த்தீக் – கங்கெனக் கனன்ற சிங்களருக்கு” என்று குறிப்பிட்டிருந்தேன். இலக்கணப் படி பார்த்தால் தவறு. தீ என்பதை ‘த்தீ’ என்று உச்சரிக்க இயலாது. அது ஒரு கோபத்தில் எழுதியதால், அவனுக்கு நம் மேல் ஏனோ அப்படியொரு கோபமெனும் கொந்தளிப்பில் எழுதியது. வார்த்தை ஜாலம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆயினும் தவறே.
சரியா அன்பிற்குறிய ரூபா?
நான் நலமே தாங்கள் நலமா அண்ணா? ஆகா நல்ல விளக்கம் எனக்கு அந்த அளவுக்கு தமிழ் புலமை இல்லை அண்ணா!
பற்று; புலமையை தேடிக் கொடுக்கும் ரூபா. தமிழ் மீது பற்று விடாது மட்டுமே வாழ முயற்சிப்போம். நம் முயற்சியில் விருப்பத்தில் ஆழத் ர்ஹெரிதலில் புலமை தானே பெற்றுக் கொள்வோம், நீங்கள் சற்று எனக்குப் பின்; நான் முன். எல்லோரும் கற்றுக் கொள்ளும் வழியிலேயே உள்ளோம். அன்பு அதற்காக நமக்கு துணை நிற்கிறது அவ்வளவு தான்!
நலமோடிருங்கள்..