எனை சுட்டுப் போட்ட சமூகம்!!

தோ ஒரு கவிதையின்
கிறுக்கலில் –
கொட்டிவிட இயலாத
உணர்வின் மிகுதியில்
நனைகிறது மனசு.

காதல் கடந்து
வாழ்க்கை கடந்து
இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து
இறக்கப் போகும் அப்பாம்மா வரை
எண்ணி அழுகிற பலரில்
என்னையும் ஒருவராய்
வைத்துக் கொள்ளுங்கள். .

யார் யாரையோ தேடி
எங்கெங்கோ அலைந்து
என்னெனவோ செய்து –
எதிலுமே நிலைக்காத புத்தி
என் தவறா தெரியவில்லை.

மனதின் போக்கு நீளும்
அத்தம் வரை –
கண்ணீரே.. கண்ணீரே.. வென
கடக்கிறேன் பொழுதுகளை
எதற்கென்றே தெரியாமல்.

இன்னும் –
என்னென்னவோ வலிகள்
எப்படி சொல்வதென்றே தெரியாமல்
கனக்கிறது உள்ளே.

அத்தனையையும்
வெளியில் சொன்னால் –
உலகம் வெகு இயல்பாய்
அவனொரு ‘சைக்கோ’ என்று
சொல்லிவிட்டு –
தன்னை சரியென்று மெச்சிய கம்பீரத்தில்
மேலேறி சென்றுவிடும்.

மனிதர் மெத்தனமாய் இருப்பது
மொத்தமும் புரிந்தும் –
போகட்டும், எதற்கோ வீண்
சிந்தனை என்று அலட்டிக்
கொள்ளாமல் விடாதலில் –
தனிமை கொன்று வீழ்த்தியும்
யாருடமே பேசுவதில்லை நான்.

உண்மையில் –
எனக்கான கவலையென்ன?

உணவோ
உடையோ
சுகமோ துக்கமோ என்றால் –
பளீரென இல்லை என்று தலையாட்டலாம்.

பிறகென்ன; ஏனிந்த
பிதற்றல் என்கிறாயா…………?

ன் கவலைகள் மொத்தமும்
நீ – எனில்
ஏற்ப்பியா என் சமூகமே???
—————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s