நீ பிறந்த தேதி
உனக்கு பெயர் வைத்து
உன்னை முதன் முதலாய்
அழைத்த நாள்,
நீ முழுச் சட்டை போட்டது
காலூன்றி நடந்தது
சப்தம் எழுப்பி பார்த்தது
அம்மா என்று அழைத்தது
அப்பா என்று அழைத்த குரல்
உயிர் வரை உள்சென்றது –
இன்னும் எத்தனை எத்தனை எத்தனை???
அத்தனையும் –
உனக்கான இடத்தில் பத்திரமாக
வைக்கப் பட்டுள்ளது என்பதை –
உனக்கொரு பிள்ளை பிறந்தால் அன்றி
உனக்குத் முழுதாய் தெரிய வாய்ப்பில்லை!