நெல்மணிக்கும்
தேயிலைக்கும்
விவசாயம் பார்த்த
தமிழனமே; வாருங்கள்
ஊரெல்லாம் உறைந்துக் கிடக்கும்
ரத்தத்தில் –
எந்த உயிர் யாருடையதெனப்
பார்ப்போம்.
ஒருவேளை அது –
என்னுடையதாய் இருந்தால்
மீண்டுமென்னை உயிர்பித்து விடுங்கள்
ஈழம் வெல்லும் வரை மட்டும்!