அன்பு தோழமை உள்ளங்களுக்கு வணக்கம்,
இதுவரை எழுதி வந்த ஈழம் சார்ந்த வலி நிறைந்த கவிதைகளை நம் தளத்தில் படித்திருப்பீர்கள். இக்கவிதைகள் முற்றிலுமாய் முடியாது எனினும் ஒரு புத்தகம் முடியப் போகிறது. ‘இரக்கமில்லா மானுடமும்;ஈழப் போராட்டமும்’ என்ற தலைப்பில் வடலிப் பதிப்பகத்தால் அச்சிட்டு, முகில் பதிப்பகத்தால் வெளியிட உள்ளது. அதற்கு அனிந்துரை தர வேண்டியே உங்களுக்கிந்த மடல் எழுதுகிறேன். உங்களின் நல்ல விமர்சனங்களை பதிவாக்க எண்ணி புத்தகத்தில் வெளியிட உள்ளொம். எனவெ இந்த நம் படைப்பிற்கு அனிந்துரை தர எண்ணுவோர் தமிழீழக் கவிதைகள் பக்கத்தில் உள்ள மொத்தக் கவிதைகளையும் படித்துவிட்டு எழுதுங்கள்.
புத்தகத்தில் வெளியிட தகுந்த விமர்சனங்கள், தேர்ந்தெடுக்கப் பட்ட பின் தெரியப் படுத்தப் படும்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தாலும் இணையத்தில் இணைந்துள்ள தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி அறிவித்து விடை கொள்பவனாய்..
வித்யாசாகர்