
இணையத்தில் இதயம் தாங்கி நட்பின் வானம் தொட்ட தோழமை உறவுகளே. நம் புதிய சிருங் கவிதைகளின் தொகுப்பான “எத்தனையோ பொய்கள்” விற்பனையில் உள்ளது. தமிழ் அலை ஊடகம் மூலமும், முகில் பதிப்பகம் மூலமும், தோழர் இசாக் (97862 18777) மற்றும் ஐயா கிரி ராஜ் (96000 00952) அவர்களை தொடர்பு கொண்டு புத்தகம் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் வரும் தொகை சமூக நற்பணிக்கே பயன் படுத்தப் படுகிறது என்பதையும் பேரன்புடனும் மகிழ்வுடனும் தெரிவிக்கிறோம்.
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தமிழ்த்தோட்டம். நிறைய சொல்ல வந்த பொழுதுகளில், நேரமின்மை காரணமாக படிக்காமலே விட்டுச் செல்லும் நண்பர்களுக்கு, சுருங்க சொன்ன நிறைய தகவல்களே ”எத்தனையோ பொய்கள். நமையறியாது எத்தனையோ இடங்கள் தவறியும் நாம் நம்மை சரியாகவே எண்ணிக் கொள்கிறோமே, ‘என்பதை சற்று நினைவுறுத்தும் புத்தகம்.
பருகும் தேநீரில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை போதுமானவருக்கு மூன்று சர்க்கரை அதிகமானது. ஒரு தேக்கரண்டி தேவையானவருக்கு இரண்டு தேக்கரண்டியும் அதிகம். சர்க்கரை நோயாளியாக இருப்பின் ஐயோ ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் விஷம். எனவே, இவ்விதம் வேறுசில முகங்களில், சரியெனும் விகிதாச்சாரங்கள் மனிதர்களை பொருத்து மாறுபடுகையில் நல்லதும் கெட்டதும் ‘இடம் ‘பொருள் ‘ஏவல்கேற்ப மாறுபட்ட பொருள் கொண்டு விடுகிறது. பிறகெப்படி நம்மை நாமே முழுதாய் உண்மை என் அங்கீகரித்துக் கொள்ள முடியும்? எனினும் தவறும்’ அல்ல, என்று வாதிக்காமல் சிந்திக்க செய்யும் ஒரு முயற்சி இது.. பார்ப்போம் வாசிப்போரின் தீர்ப்பிற்கே காத்திருப்போம்!
நல்ல அருமையான தகவல் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அருள். எத்தனை சுமையாக என்ன இயலாமை இருப்பினும்; எழுத்து மிச்சப் பட்டு போக வேண்டாமே என இயன்றவரை எழுதியவைகளை புத்தகமாக்கும் முயற்சியிலேயே உள்ளேன். அவைகளை வீட்டில் அடுக்கி வைத்து வட்டிக் கட்டுவதும், மறுபதிப்பு போட்டு அடுத்த புத்தகத்திற்குமாய் பொது சேவைக்குமாய் உதவுவதும் உங்களை போன்றோரின் கைகளிலேயே உள்ளது அருள்!