நீ பார்க்கும்
கண்ணாடியில் என்
நினைவு படர்ந்ததுண்டா?
நீ விளக்கும் பற்பசையில்
என் நினைவு –
இனித்ததுண்டா??
நீ எழுதும்
எழுத்துக்களில்
என் பெயர் தெரிவதுண்டா?
நீ பார்க்கும்
பார்வையில்
எனக்கான தேடலை வைத்திருக்கிறாயா???
தேடித் பார்..
எங்கேனும் உனக்குள் நான்
நிச்சையம் இருப்பேன் –
இல்லையெனில்
எனை பார்க்காதே
யாருக்கும் தெரியாமல் சிரிக்காதே
தெருமுனை சென்று திரும்பாதே
என்னருகே வந்து மௌனமாய் நிற்காதே
உன்னிடம் எனக்கென
ஏதும் இல்லாதலில்
நானும் எனக்கென
என்னிடம் ஒன்றுமேயில்லை என
எண்ணிக் கொள்கிறேன்;
உயிரும்!
———————————————————————-