தொட எண்ணினால் இனிக்குமோ
பார்த்தால் கவருமோ
பார்த்த பின் மயக்கமோ
மயங்கினால் சிரிக்குமோ
சிரித்தால் சொர்கமோ
சொர்க்கம் தரையிலோ
நடக்கும் பெண்ணிலோ
பெண்ணென்றால் பூவோ
சுடும் தென்றலோ
சொல்லியடங்கா எல்லையின் விரிவோ
விரிந்த வான் மனமோ
ஆழக் கடல் எண்ணமோ
என்னெல்லாம் எழுதினேன் –
அவள் எழுதிய என் காகிதத்தை படித்து
மடித்துக் கொண்ட பின் –
ஒற்றை பார்வையின் சிரிப்பில் உதிர்த்தாள்
அவள் காதலை!
———————————————————————-
//ஒற்றை பார்வையின் சிரிப்பில் உதிர்த்தாள்
அவள் காதலை!//
ஒ கோ
LikeLike
காதல் ஒரு உலகளாவிய உணர்வு, அதன் முகத்தை பார்த்து குறிப்பெடுப்பதும் ரசிப்பதும் தான் என் இப்போதைய வேலை, காதலிப்பதல்ல. வேண்டுமெனில்; என்றோ பார்த்த பார்வைகள், பட்ட வலிகளில்; வரிகள் சில ஒத்துப் போகலாம் தோழர். மிக்க நன்றி!
LikeLike