கண்டதும்
கேட்டதும்
மெய்யோ? பொய்யோ??
ஆடலும்
பாடலும்
மெய்யோ? பொய்யோ??
ஆள்பவர்
யாவரும்
மெய்யோ? பொய்யோ??
அண்டமும்
வீடும்
மெய்யோ? பொய்யோ??
நானும்
நீயும்
மெய்யோ? பொய்யோ??
நகர்வும்
மரணமும்
மெய்யோ? பொய்யோ??
மெய்யும் பொய்யுமாய்
மடிவதும்
பிறப்பதும்
ஏனோ? ஏனோ?? ஏனோ???
———————————————-