இழிவு நிலை
எச்சில் குடிக்கிறது,
எவன் சொன்னதும்
சொல்லாததும் கூட
வலிக்கிறது,
வந்தவர் போனவர்
வாரி தூற்றுகிறார்,
நன்றி மறந்தும் நிறையவே
பேசுகிறார் –
தட்டிக் கேட்டால்
தவறென்கிறார்,
விட்டுப் பார்த்தால்
பிரித்தே பேசுகிறார்,
எப்படியோ முடிவில் தன்னையும்
தமிழரென்கிறார் !
———————————————-