குடி அறுந்தாலும்
குடிக்கலாம்,
கொடி பறந்தாலும்
குடிக்கலாம்,
எவர் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் –
குடிக்கலாம்,
காரி முகத்தில் உமிழ்ந்தாலும்
குடிக்கலாம்,
ஏதேனும் –
ஒற்றை காரணம் சொல்லிக்
குடிக்கலாம்,
மானம் காற்றில் பறந்து
கூத்தாடிப்போகும் வரை குடிக்கலாம் –
டாஸ்மாக்கிற்கா பஞ்சம்??
———————————————-