உன் –
வருகைக்காய் காத்திருந்தே
புகைப்படங்களில்
புகைப்படங்களில்
புதைந்தேனடி..,
உன் புகைப்படத்தின்
அழகினிலே
என் மொத்தத்தையும் தொலைத்தேனடி..,
என் மொத்தத்தையும் தொலைத்தேனடி..,
உன் முக அழகை
தொட்டுப் பார்த்தே –
இதயத்தை –
இதயத்தை –
ஈரமாக்கிக் கொண்டேனடி..,
உனில் –
ஒவ்வொன்றாய் ரசித்து ரசித்து
நீயில்லாமலே உன்னோடு
நீயில்லாமலே உன்னோடு
வாழ்ந்தேனடி..,
நீ வந்து பேசிடாத
ஒரு வார்த்தைக்காய் –
நகரும் நிமிடங்களை கூட
நகரும் நிமிடங்களை கூட
சபித்தேனடி..,
நாளை –
நீ வரும் நாளிற்காய்
இன்றையை கூட
இன்றையை கூட
எதிர்த்தேனடி..,
என் மனசெல்லாம் பூத்த நீ
காதலியோ; தோழியோ;
காதலியோ; தோழியோ;
ஏதோ ஒன்றென்று எண்ணிக்கடி
இல்லையேல் –
வெறுத்தேனும் பேசி
உயிர் கொல்லடி!!
உயிர் கொல்லடி!!
———————————————————-
வித்யாசாகர்
வணக்கம் உறவே
உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..
நன்றி
வலையகம்.கொம்
http://www.valaiyakam.com
LikeLike