36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்!

 
ரு சொட்டு
மின்சாரத்தின் விலை
இரு சொட்டு வெளிச்சம்.
 
அல்லது
யார் உயிரையோ காக்க போராடும்
ஒரு இயந்திரத்தின் – 
உயிரில் துளி.
 
இரு புன்னகை பூக்களின்
இடையே பரவும் –
வெப்பத்தின் மூலாதாரம்.
 
உடல் தகிக்கும் உணர்வின்
உயிர் தொடும் – அலையில்
இடையே கலந்த இயக்கி; ஒரு சொட்டு மின்சாரம்!
 
ண்டு திரிதலில்
உறங்கி எழுதலில்
ஓய்வென்று அமர்கையில்
பல ஓட்டத்திற்கு மத்தியிலும்
சொட்டு சொட்டாய் –
கலந்து சேர்ந்த மின்சாரம்; அபாரத்தின் வெளிச்சம்!
 
வீட்டில் கேட்கும் குழந்தை
சப்தத்திலிருந்து –
வீட்டின் கடைகோடியில் எரிக்கும்
புதைக்கும்
எதற்காயினும் –
ஒரு சொட்டு  மின்சாரமேனும்
இல்லாமல்;
இல்லாமை நிலையை 
இருப்பாக்கிக் கொண்டது வாழ்க்கை.
 
டலில் உப்பை அகற்றி
குடிநீர் கொடுக்கவும்,
குடிநீர் சேகரித்து பகுதி பகுதியாக
பிரித்தனுப்பி –
உயிரறுந்து போகாமல்
நீரால் ஒட்டிவைக்கவும்
மின்சாரத்தின் பங்கு –
நீரும் காற்றும் போல் ஒன்றாகியே போனது.
 
நீரின்றி இறந்து போவாய்
காற்றின்றி மூச்சடைக்கும்
மின்சாரமின்றி –
இறந்தா போவாய் மூடா; என்று யாரேனும்
நினைப்பீர்களேயானால் –
அந்த கேள்வியை நீங்களே உங்களிடம்
கேட்டுக் கொள்ளுங்கள்; அல்லது
 
இன்று முழுவதும் எதற்குமே
மின்சாரம் உபயோகப் படுத்துவதில்லை என
ஓர் தினம் மின்சாரத்தை நிறுத்தித் தான்
பாருங்களேன்?
 
முகத்திற்கு நேரே சுற்றும் ஈயிலிருந்து
மூக்கில் அமர்ந்து கடிக்கும் கொசுவிலிருந்து
தனை கேட்காமல் வியர்க்கும் உப்புநீர் வரை
மடையா அந்த மின்விசிறியை
போட்டுவிடு எனலாம்.
 
மின்விசிறி என்ன,  
மரங்களை வெட்டி வெட்டி சூரியனிடம் கொண்ட
பகையால் –
குளிர்சாதனம் கூட தேவைபடலாம்.
 
எதற்காயினும்
மின்சாரம் தேவை!
 
றுகாய் அறிக்கை விட
இட்லி சட்டினி நாக்கு தட்டி திண்ண
நிறுவனங்கள் இயங்க
மருத்துவம் பார்க்க
மருந்துகள் செய்ய
கவிதை எழுதி தட்டச்சில் கோர்க்க
புத்தகமாக்கி வரலாறு வைக்க; என
மின்சாரம் இல்லாத இடம்
காற்றும் நீரும் இல்லாதது போல் இல்லை, என்றாலும்
இல்லாதது போல் தான்!
 
சையில் நினைவுகளை உசுப்பி
உணர்வுகளில் ஒரு சின்ன
அசைவை ஏற்படுத்தக் கூட
மின்சாரம் வேண்டுமளவு இசையை
செயற்கையோடு மட்டுமே
இணைத்துக் கொண்டுள்ள நம் வாழ்க்கைக்கு
மின்சாரம் இல்லையேல் –
மன அமைதி கூட இல்லை!
 
மின்சாரம் இல்லாத
இவ்வாழ்க்கையை
மின்சாரம் துண்டிக்கப் படும் நாட்களில்
தெருக்களில் வந்து விழும்
ஏதேனும் ஒரு வீட்டின்
ஒற்றை சாபம் கண்டிப்பாக
கத்தி கத்தி சொல்லும்; கருப்பாக்கியாவது காட்டும்!
 
ன்றைக்கெல்லாம் நாங்கள் என்ன
மின்சாரத்திலா இருந்தோம் என்பவர்கள்
யாரேனும் இருப்பின் –
மின்சாரமே சாராமல் ஒரு நாள்
இன்று இருந்துக் காட்டுங்களேன் – உங்களுக்கு
உங்களின் அந்த பழைய
பத்து நாளை இனாமாக
நாளையிலிருந்து தந்து விட
மின்சாரம் கொண்டு ஏதேனும் செய்துவிடலாம்.
 
இல்லை இல்லை யார்சொன்னது
மின்சாரம் எவ்வளவு முக்கியம் தெரியுமா
என்கிறீர்களா???
 
ப்ப சரி,
உங்கள் வீட்டை போய் சற்று
சுற்றி பாருங்கள் –
ஏதேனும் ஒரு  மின்விளக்கோ மின்விசிறியோ
திறந்து வைத்துள்ள குளிர்சாதனப் பெட்டியோ
யாருமின்றி இயங்கும் தொலைக்காட்சியோ
வசிக்கா விட்டாலும் அணைக்காத குளிரூட்டிய அறைகளோ
பக்கத்து தெருவரை கேட்க கத்திக் கொண்டிருக்கும்
வானொலிப் பெட்டியோ
டம்பமடிக்கும் விளம்பர பலகைகளோ அல்லது
ஏதேனும் ஒன்று
துண்டிக்கப் படவிருக்கும்
மற்றொரு நாளின் மின்சாரத்தை
இன்றைக்கே தொலைத்துக் கொண்டிருக்கும்!
——————————————————————————-
 
வித்யாசாகர் 
 
குறிப்பு: மின்சாரம் சேமியுங்கள்; வெளிச்சம் மிச்சப் படும்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to 36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்!

  1. கொய்யா சொல்கிறார்:

    ஊருல இருக்குற பேர்வாதி மின்சாரத்த விளம்பர பேனர்கள், கட்டிட அலங்காரங்கள்னு வீணாக்குறாங்க. அது தவிர திங்கற இடத்துல இருந்து பேளற இடம் வரைக்கும் ஏசி போட்டு வீணாக்குறாங்க பணக்கார பன்னாடைங்க.

    அதுக்கு ஒரு கவுஜை எழுதுங்களேன் பிளீஸ்

    இப்படிக்கு
    கொய்யால

    Like

  2. படைப்பாளி சொல்கிறார்:

    அருமையான வரிகள்..ஆழமான சிந்தனை

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வணக்கம் தோழர், மின்சாரமில்லா ஒரு நாள் எத்தனையோ வருத்தமும் உளைச்சலும் கொள்கிறோம். ஆனால் மின்சாரம் வந்த உடன் விளக்கை கூட அணைக்காமல் செல்லும் நிறைய பேர் நம்முடனேயே, நம் வீட்டில் கூட இருக்கிறார்கள்.

      அவர்களுக்கு நாம் வலியுருத்துவம். மின்சாரம் செலவானால்; ஆனது தான். மீண்டும் உற்பத்தி என்பது எத்தனை பெரிய மெனக்கெடல் என்று சொல்லிக் கொடுப்போம். இயன்றவரை மின்சாரத்தையும் தண்ணீரையும் அவசியம் தாண்டி செலவிடுவதை தவிர்க்கவும், சேமிக்கவும் செய்வோம், சொல்வோம்.

      நம் தேவைகளை; நம் சேமிப்பிற்குள்ளேயே பூர்த்தி செய்துக் கொள்ள முனைவோம். மிக்க நன்றி நல்-படைப்பாளி!

      Like

  3. uumm சொல்கிறார்:

    very nice

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மௌனம் கூட சரி என்னுமர்த்தம் என்பார்கள். நீங்கள் மௌனம் போல் நிலவும் வார்த்தைகளையே விட்டுச் செல்வதில்; உள்ளத்தின் அக்கறை புரியாமலில்லை…

      மிக்க நன்றி உமா..,

      Like

  4. chellamma vidhyasagar சொல்கிறார்:

    நல்ல கவிதை சமூக அக்கறை உள்ள கவிதை. வாழ்த்துகள்!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றிடா.. செல்லம்மா. உலகின் மனிதர்கள் சேமிக்க நினைத்தாலே; இருப்பின் படங்கு பண்மடங்கிற்கு நீளலாம். வா நாமும் சேமிப்போம்.., எங்கேனும் வீணாக எரியும் ஏதேனும் ஒரு விளக்கையோ.. மின்விசிறியையோ அனைத்து விட்டு வருவோம் வா..

      Like

  5. மதுரைசரவணன் சொல்கிறார்:

    மின்சாரம் வார்தைகளால் சுடுகிறது. வாழ்த்துக்கள்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      சொல்ல மட்டுமே நினைத்தது சரவணன்; சுடும் எண்ணமில்லை. படிப்பவர்கள் ஏற்று, வீணாக எரியும் ஒரு மின்விளக்கினை அனைத்தாலும், அணைக்க சொன்னாலும், நம் கவிதைக்கு உயிர் கிடைக்கும் சரவணன். மிக்க நன்றி..

      Like

பின்னூட்டமொன்றை இடுக