கரும்புலிகள் கதை கேளு
மரணமெல்லாம் தூசி பாரு,
ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து
அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு;
கரும்புலிகள் உதிரம் பூத்து
கடல்கூட அழுது சிவந்தது பாரு –
உயிரும் வருடமும் பல; பலிகொடுத்தும்
ஈழம் மட்டும் – இலங்கையாச்சி பாரு;
மில்லர் போல பலபேரின்
இலட்சியக் கனவு சாமாதியில் பாரு –
கமலுக்காக ஒரு பெண்ணின்
கட்டாத தாலி விதவையாச்சி பாரு;
அங்கையர்கன்னி வரலாறெல்லாம்
கடலெழுதிக் கொண்டது பாரு –
பெண்கள் செய்த சாகசங்கள் – கூட
வெற்றிகொண்ட மரணமாச்சி பாரு;
காந்தரூபன், கொலின்ஸ், டாம்போவின் இறப்பெல்லாம்
விடுதலையின் வேட்கை பாரு –
உயிர்கள்; பல கொடுத்து – காத்த ஈழம்
முள்ளிவாய்க்காளோடு மௌனமாச்சி பாரு;
ஒன்றா இரண்டா உயிர்கொடுமை
எல்லாம் –
ஈழமண்ணின் வீரம் பாரு –
விட்ட உயிர்கள் முளைத்தொரு நாள்
எங்கள் தேசம் வெல்லும்; உறுதி பாரு;
செத்த –
பிணம் கூட வீரங் கொள்ளும் பாரு;
கரு விதைத்த கரும்புலிகளின்
சமாதி கூட பாடம் புகட்டுது பாரு!!
மிகவும் உருக்கமான வரிகளில் எழுதியுள்ளீர்கள்….
ஒவ்வொருவரிகளும் உணர்ச்சிச் செறிவு கொண்டிருப்பது அருமையிலும் அருமை….
இந்த வரி நன்று… என்று எடுத்துரைக்க ஏதுமில்லை
அனைத்துமே அவ்வளவு அருமை…
உங்கள் எழுத்துலகப் பணயம் தொடர என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்…
LikeLike
மிக்க நன்றி விஜய். கண்ணில் பார்த்திருந்தால், அவர்கள் அருகாமை கிடைத்திருந்தால் ஒருவேளை அவர்களின் சாமதிகளுக்கிடையே எனக்கும் ஓரிடம் இந்நேரம் இருந்திருக்கலாம். அதற்கெல்லாம் வாய்ப்பின்றி அமைந்தது வாழ்க்கையும்; சூழலும்; எனும் சொற்ப சிந்தனையில் உற்ற வலிகளே இவ்வரிகள். அன்றி, கவிதைகள் என்று முன்மொழிந்துக் கொள்ள விரும்ப வில்லை விஜய்!
LikeLike
கரும்புலிகள் கதை படித்தால் செத்த –
பிணம் கூட வீரங் கொள்ளும் பாரு;
உங்கள் வரிகள இது.
செத்த உயிர்கள் முளைத் தொரு நாள்……. இது பல தமிழர் கனவு.
கையறு நிலையில் வரும் கனவு….
நல்ல உணர்வு வரிகள். வாழ்த்துடன்; வளர்க! மேலும் உயர்க!
அன்புடன்.
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
LikeLike
மிக்க நன்றி சகோதரி. என் கவிதைகள் என் செய்கிறதோ. ஒரு அங்கயற்கண்ணி, ஒரு மல்லர், ஒரு கமல், ஒரு காந்தரூபன் கொலின்ஸ் டாம்போ.. என இன்னும் எஞ்சியவர்களை இயன்றளவு அறியாதோருக்காவது அறிமுகம் செய்யும் இல்லையா…? அதில் நிறைந்து போகிறேன்!
LikeLike
கரும்புளிகளென அழைக்கப் படும், ஈழ தேச விடுதலைக்காய் உயிர் தந்த மாவீரர்களின் கூடுதல் விவரங்களை இத் தளங்களிலும் படித்தறியலாம்:
மீனகம்:
http://meenakam.com/?p=1702
தேசியம்.காம்:
http://arugan.wordpress.com/2010/07/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/
ஈழவர் குரல்:
http://eelavarkural.wordpress.com/2008/09/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
அருச்சுனா.காம்:
http://www.aruchuna.net/categories.php?cat_id=18
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
LikeLike