நிறுத்துங்கள் !!!
மௌனமென்னும் மண்
பூசி தான் –
ஈழத்தில்
வந்தேறியின் சுவடுகள் கூட
வெற்றிக்கொடியின்
சின்னமாயின.
ஈழத்தில்
தமிழரின் ரத்தம்
ஈரமாக மட்டுமே
மீதமானது.
ஓ………. உலக தமிழினமே
மௌனம் களைந்து
புறப்படுவோம் வாருங்கள்;
போர் வேண்டாம் –
ஓர் குரலாவது கொடுப்போம்,
அதை; எல்லோரும் கொடுப்போம்!!
——————————————
ஓ………. உலக தமிழினமே தனிமனிதன் வித்தியாசாகரின் எண்ணம்
உங்கள் உள்ளங்களிலும் உதிக்கட்டும்
ஈழத்தமிழர் தலைநிமிர…..
மிகவும் அருமை….
வலிகளை பார்ப்பவன் சாமனியன், உணர்ந்ந்து வலித்துக் கொள்பவன்; வலிக்கு மருந்து தேடி பிறருக்காகவும் அலைபவனே படைப்பாளி விஜய்!
மிக்க நன்றிப்பா..
கவிதை
ஓவியம்
மிக்க நன்றி சர்மிளா. கவிதையும் ஓவியமும் குறைந்திருந்தே தான் மனதை கொள்ளை கொள்கிறது.. வார்த்தையில் தொக்கி நின்றே மனதில் பதிகிறது.. அதனால் தான் ஒற்றை வார்த்தையில் நின்று கொண்டீர்களோ.. நன்றிமா..
ஓர் குரலாவது கொடுப்போம்,
அதை; எல்லோரும் கொடுப்போம்!!
அருமை….
களமிறங்க முடியாதவனின் கையில் கிடைத்த எழுதுகோலாவது; எவரையேனும் களமிறக்கும். ஒரு குரலையாவது கொடுக்க வைக்கும் என்ற முயற்சியில் எழுதத் துணிந்தது.
விரைவில் இத் தொகுப்புகள் ஒரு தொகுப்பாக வரவுள்ளது. எவர் ஒருவரையேனும் இத்தொகுப்பு மாற்றுமெனில்; உங்களை போன்றோரின் அருமைகளை அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.
மிக்க நன்றி யாழ்_அகத்தியன்!