தெருவெல்லாம் சுத்தம்
செய்தான்,
சாக்கடை நீரில் இறங்கி
தூர் வாரினான்,
உடைந்த சுவரு பூசி
மெழுகி கொடுத்தான்,
இரவு கருக்கையில் தெருவோரம்
விழுந்துக் கிடந்தான் –
மது அவனை குடித்திருந்தது.
வெறும் நாற்றமென்று மூக்கை பிடித்து
ஒதுங்கி சென்றோ –
குடிகாரன் என்ற ஒற்றை வார்த்தையிலோ
சுருங்கி அடங்கிப் போகிறோம் நாம்;
மானுடம் வலுக் கொள்கிறதா என்றால்
இல்லை என்கிறது – இக்கவிதை!
————————————————————–
இடதுபக்க கரையில் நிற்கிறீர்கள்…நன்றி.
இறங்கினீர்கள் எனில் சிந்தனை சிறகும் விரிக்கலாம்…
சித்தாந்தத்தில் சிக்கியும் கொள்ளளாம்…
ஆம்; ஒருநேரம் மனம் தின்னிக் குரங்காகத் தான் அலைந்தது மனசு. பிறகு மனிதம் மனிதம் என்று கத்தியதில் பயம் கொண்டது; தவறு நேர்ந்துவிடுமோ என்று.
அந்த பயம், அதிக இடங்களில் என்னை தவறவிடாதிருக்க பயன்பட்டது. படுகிறது!