ஊரெல்லாம்
இருந்த குளங்கள்
பிளாட் போட்டு
விற்பனையாகி விட்டது;
ப்ளாட்டிற்குள்
ஸ்விமிங் புல்
கட்டியாகி விட்டது;
ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து
நினைத்துக் கொள்கிறோம் –
குளக் கரையின் சில்லென்ற காற்றை,
ஸ்விம்மிங் புல்
சிரித்துக் கொண்டது.
குளக்கரை நம் கைவிட்டு
எங்கோ போனது.
ஏதோ ஒரு விதத்தில் ஏற்பட்ட இழப்பை
வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்கிறோம்
நாம் மட்டும்!
————————————————————
//ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து
நினைத்துக் கொள்கிறோம் –
குளக் கரையின் சில்லென்ற காற்றை//
சில்லென்ற வார்த்தையில் செருகப்பட்ட கவிதை…
நடப்பதை எல்லாம் உடனுக்குடன் பார்க்க இயலாத தூரத்தில் உள்ளோம். பார்ப்பதை உடனே சூடாக சொல்லிடாத பதத்தில் உள்ளோம். சொன்னாலும் உதறிவிடுபவர்களில் காணாமல் போகிறோம். போகட்டுமென கடைசியாய், இயன்றதை மட்டுமே செய்கிறேன்.
நன்றென்றதில் நன்றியுமானேன் ஐயா!