எழுச்சிக் கவிதாயினி சரளாவின் கவிதைகள்..

ன்னால் சந்தோசத்தை
பகிரமுடிவதில்லை.

முழுதாய் உணரவும்
துய்க்கவும் முடிவதில்லை.

கண் மூடினால்
கற்பு களவாட படும் –
கண் திறந்தால்
கற்பு அழிக்கப்படும் என
கங்கணம் கட்டிகொண்டிருக்கும்
கள்வர்களுக்கு மத்தியில் –
காற்றில் கரைந்து விட
துடித்து கொண்டிருக்கும் என்
சகோதரியின் அவலத்தை நினைக்கையில் –

எப்படி என்னால் இன்பத்தை
துய்க்க முடியும்???

துக்கத்தின் அடக்க முடியா
வெளிப்பாடினை –
விழிநீர் உடைப்பெடுத்து
வெளிபடுவதை கூட ஊரார்
ஆனந்த கண்ணீரென –
அடையாள படுத்துகின்றனர்;

உணர்வுகளை
வேரோடு பிடுங்கி எரிந்தபின்
வெறும் வெற்றுடம்பாய்
இதயம் இருந்த இடத்தில
இயந்திரத்தை பொருத்திக்கொண்டு
கட்டளைகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறேன்!!
————————————————————————

ப்போது உன்
மானம் அழிக்கப்பட்டு அந்த
மண்ணில் விழுந்து
மாண்டயோ;
அபோதே பறிபோனது
உன்னோடுஎன் உயிரும் …
————————————————————————

த்தனை போர்க்களம்
வந்தாலும்
ஆணுக்கு மட்டுமே
அது பொற்காலம்;

பெண்ணுக்கு –
போதாத காலம் தான்!
————————————————————————

நீங்கள் வீழ்த்தியதாக
நினைத்து மார்தட்டிக் கொள்வது
எங்களின் குல கொழுந்தை;

உங்களின் சந்ததிகளை
வளர்க்கும்   வளமான மண்ணை;

உங்கள் விதைகளை மட்டும்
வைத்து ஒரு போதும்
விருச்சத்தை உருவாக்க முடியாது.

இந்த உண்மை புரியும் போது –
கழுகுகளின் கடைசி உணவாய் நீ இருப்பாய்!!
————————————————————————
எழுச்சிக் கவிதாயினி ‘சரளா’
கோவை.

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் and tagged . Bookmark the permalink.

26 Responses to எழுச்சிக் கவிதாயினி சரளாவின் கவிதைகள்..

 1. வித்யாசாகர் சொல்கிறார்:

  வார்த்தையில் சம்மட்டி கொண்டு, உலக அகோரங்களை எல்லாம் அடிக்கும் உணர்வு மிக்க வரிகள் சரளா.

  அழுது அழுது வடிந்தாலும், ஒரு நண்பர் ஒரு பதிவில் ‘வெறும் குறைக்கும் நாய்கள் நாம்; குறைப்போம்’ என்று பதிவிட்டதே உள்ளே நினைவில் நின்று குத்தி வலிக்கிறது. மீறியும், இதையேனும் செய்ய கடவோம் எனும் குறைந்த பட்ச ஆறுதலில் காலம் கடத்தும் நம்மிந்த தளத்திற்கு, உங்கள் படைப்புக்களும் பலம் சேர்ப்பதில் மகிழ்வுறுகிறேன்.

  மிக்க வாழ்த்துக்கள் சரளா!!

 2. sarala சொல்கிறார்:

  லிநிறைந்த வடுக்கள்
  நீருபூத்த நெருப்பாய் –
  நெஞ்சு குழிக்குள்
  புகைந்து கொண்டுதான் இருக்கிறது;

  புகைச்சலிலும்
  புழுக்கத்திலும்
  புண்பட்டு போன வடுக்களோடும்
  வாழ்ந்துகொண்டிருக்கிறோம்;

  நீர் ஊற்றி அணைத்து விட
  உறவுகள் வரும் என்ற
  நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்;

  எங்கள் துயர் துடைக்கும் கரங்களே
  துருத்தியாய் மாறி எங்கள் –
  உயிர் உருஞ்சுவதை நினைக்கையில்,
  சாம்பலாகிவிடலாம் என்று
  சாக துணிந்தோம்.

  நாளைய சரித்திரத்தில்
  எங்கள் விழுப்புண்களை
  நீங்கள் எண்ண வேண்டாம்

  எங்களின் வரலாறினை
  படிக்க வேண்டாம்

  நாளைய வரலாறுக்காக
  இன்றைய வர்க்கம் –
  வலிகளோடு வளம் வரவேண்டாம்

  தன் இனம் காக்க தவறிய
  தன் மானம் இல்லாதவன்
  தமிழன் என்று –
  வரலாறு வசை பாடவும் வேண்டாம்,

  எதிரிகளை எதிர்காற்றால்
  எதிர்கொண்டு வெற்றிகொண்ட
  சோழர் குலத்தவன் இன்று
  சோரம் போனான் என்ற
  பழிச்சொல்லும் வேண்டாம்,

  உறவுகளின் புறக்கணிப்போடு
  உயிர்வாழ்வதை விட –
  எதிரிகளின் காலடியில்
  வீழ்வதை விட –

  எதிரிகளை எதிர்த்தேனும்
  வீர மரணம் கொண்டுவிடுகிறோம்!!
  ———————————–
  சரளா.கோவை.

 3. sarala சொல்கிறார்:

  விழுந்தால் உடைந்து
  விடுவோமோ என்று
  விம்மி அழுகிறது
  அழுகையின் அதிர்வில்
  விழுந்து தான் போனது
  அந்த ஒரு துளி

  விழுந்ததாலே
  வீழ்ந்துவிடுவோம்
  உடைந்துவிடும் என்று
  வீணான அர்த்தம் கொண்டது

  விழுந்தபின் தான்
  தெரிந்தது தனக்குள்
  விரிந்த ஒரு உலகத்தின்
  விதை இருப்பதை

  மண்ணில் பரவி
  விண்ணை நோக்கி விரைந்து
  விருச்சமாய் வளர்ந்த பின்
  கம்பீரமாய் நிற்கிறது

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   உலகின் தோல்விகளுக்கு வெற்றியை கற்பிக்கும் கவிதை சரளா.

   சூழல்; நிகழும் மாறுபட்ட சூழ்நிலைகளால் மாறுபடுவதில் நல்லதும் கெட்டதும் நிறைந்திருந்தும் கெட்டதை எண்ணி வருந்துமளவிற்கு நல்லதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, கெட்டதை தாண்டி நல்லதை தேடும் பாடம். சீரிய வரிகள் சரளா… பாராட்டுக்கள்!!

 4. sarala சொல்கிறார்:

  மகிழ்ச்சி வித்யாசாகர் ,
  உங்கள் வாழ்த்துக்கள் என் எழுத்துகளை வாழவைக்கும்

 5. sarala சொல்கிறார்:

  தெளிந்து இருந்தால்
  யாரவது கல்லெறிந்து
  களைத்துவிட்டு செல்கிறார்கள்
  அதனால் நானே
  களைத்து கொள்கிறேன்

  அழகாய் இருப்பதில்
  அதிக அக்கரை கொள்வேன்
  அசிங்க படுத்த யாரவது வருகிறார்கள்
  அதனால் அசிங்கமாக இருக்கிறேன் இபோதெல்லாம்

  எதார்த்தமாய் இருக்க
  எத்தனித்தபோது
  வினையை விதைத்து செல்கிறார்கள்
  ஆனாலும் விதைக்க தெரியவில்லை வினையை

  இயல்பாய் என்னை வெளிபடுத்த
  நினைக்கையில்
  நடிப்பை கற்றுகொடுகிரார்கள்
  நடிப்பே பிரதானமானது

  எனக்கான தேடலில்
  எனக்கான சுயம் இழந்து
  யாரோ ஒருவரின் முக மூடிகளை
  அணிந்து கொண்டால்தான்
  நான் நானாக அடையாலபடுதபடுகிறேன் …………………..

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   பிறரின் முகமூடிகளை, ஒப்பனையளவிற்கும் குறைத்து, தேவையில்லையெனில் அகற்றி, நீங்கள் நீங்களாக இருப்பதில் பெருமை உண்டென்றே; என்னை அறிகிறேன் சரளா நான். எனினும்,

   //அழகாய் இருப்பதில் அதிக அக்கரை கொள்வேன் அசிங்க படுத்த யாரவது வருகிறார்கள் அதனால் அசிங்கமாக இருக்கிறேன் இபோதெல்லாம்//

   யார் யார் குற்றத்தையோ எண்ணி, அதற்குள் நாமும் இருப்போமோ என்று தன்னை தானே நொந்து உணர வைக்கும் வரிகள். மிக்க அருமை என்று சொல்ல மட்டும் முன் வரவில்லை. பதிவு செய்யுங்கள், தவறிழைப்பவர்களுக்கு உரைக்கட்டும்! மிக்க நன்றிமா!!

 6. sarala சொல்கிறார்:

  வித்யாசாகர் அவர்களுக்கு,

  எத்தனை பெரிய எழுத்தாளனாக இருந்தாலும் புகழின் உச்சி அவனுக்குள் ஒரு கனத்தை உருவாகிவிடுகிறது தன்னை விட உயர்ந்தவன் இந்த தரணியில் இல்லை என்று மார் தட்டிக்கொள்ள துடிக்கிறது.

  அந்த கனம் இல்லாத உங்களின் உள்ளத்திற்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களையும் ஊக்குவித்து கவிதை எழுத அழைக்கும் உங்கள் பெருந்தன்மையான உள்ளம் இந்த பக்கத்தில் நிரம்பி வழிகிறது . உங்கள் அழைப்பிற்கு வருகை தந்து இந்த பக்கத்தின் பெருமையை பரப்ப எனக்கு ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன்.

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். எழுதுவதே இன்னும் பலரை உருவாக்க தானே சரளா. நான் வளர்கிறேன் என்பதன் அர்த்தம்; என்னோடு இன்னும் பலர் வளர்வதாக இருத்தல் வேண்டும்.

   நிறைய எழுதுங்கள். இந்த கவிதைகளுக்கு தலைப்பிட்டு உங்கள் வழியிலோ அல்லது தக்க செமிப்பிலோ வைத்து விரைவில் புத்தகமாக வெளியிடுங்கள். எண்ணங்கள் உலகார்ந்து உலகம் தாங்கி உலகம் வரை சென்றிருத்தலே சிறப்பு. உங்கள் படைப்புக்களும் அங்ஙனம் சிறப்பு கொல்லட்டு, வாழ்த்துக்களும், நன்றிகளும்!!!

 7. sarala சொல்கிறார்:

  உடல் கூறுகளை மட்டுமே
  உயர்வாக பேசி திரியும்
  உயர்வில்லா உள்ளங்களுக்கிடையில்

  உளகூறுகளை அறிந்து
  உலகரியசெயும்
  உன்னத உள்ளங்களை அறிய முடிகிறது

  எங்கோ ஒரு மூலையில்
  ஒரு உயிரின் அவலகுரலை
  ஊடகத்தின் மூலம் பார்க்கும் போது

  உள்ளம் கசிகிறது
  உணர்வு பொங்குகிறது
  மனசு கனத்து போகிறது

  என் இரத்தம் துடிக்கிறது
  அந்த உயிருக்கும் எனக்கும் என்ன உறவு
  என்று எதார்த்தமாய் இருக்க முடிவதில்லை

  என் வீட்டில் இழவு விழுந்தது போல
  எனக்குள் அப்படி ஒரு சோகம்
  எதையோ இழந்தது போல தவிப்பு ….

  எப்படியாயினும் பிழைத்து விடக்கூடும்
  யாரேனும் காப்பாற்றிவிட வேண்டும் என்று
  கடவுளோடு மன்றாடுகிறது மனது ………….

  ஏன் எனக்குள் இந்த வலி
  என்று ஆராயவில்லை
  ஆச்சரியபட்வும் இல்லை

  எங்கு பறந்து சென்றாலும்
  படர்ந்து சென்றாலும் – நாம்
  ஒரு தாயின் தவப்புதல்வர்கள்
  என்பதால் வந்த வலி இது …………………

 8. sarala சொல்கிறார்:

  தீக்குச்சி

  எனக்குள் அலை கடலையும்
  அடக்கி வைத்திருக்கிறேன்

  எரிமலையையும் கட்டி வைத்திருக்கிறேன்
  சூறாவளியை கூட அடைத்து வைத்திருக்கிறேன்

  நான் நூற்றாண்டு காலமாய்
  பொத்தி வைத்த அனைத்தையும்

  நொடிபொழுதில்
  பொங்க செய்தாயே ?

  உன் ஆணவமான பேச்சுளும்
  அகந்தையான நடத்தையும் கூட

  என்னை அழ வைத்ததில்லை
  எனக்குள் கோபத்தை மூட்டவில்லை

  உன் ஓர பார்வையில்
  கழிவு போல தேங்கி இருந்த சந்தேகம்

  தீக்குச்சியாய் உரசிபோனதடா
  என் பெட்ரோல் மனதை …………………..

  கோவை மு. சரளாதேவி

 9. munu. sivasankaran சொல்கிறார்:

  போர்க்களங்கள்.. .. !
  வாளெடுத்துக் கொடுத்து
  வழியனுப்பி வைத்தகாலம்
  வகையழிந்து போனது ..!
  வாகை சூடும் காலம்
  வழிமேல் தெரிகிறது..!

  வாழ்த்துக்கள் சகோதரி..!

 10. munu. sivasankaran சொல்கிறார்:

  சந்தேகப் புத்திக்கு கண்களால் காரித்துப்பியது…

  என் கவனத்தை கலைத்து விட்டது..!

  இழுக்கான எண்ணத்திற்கு அழுக்கான உவமை…!

  அருமை..!

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மு.சரளாதேவி, எதிர்காலத்தில் ஒரு பெரிய இலக்கியப் போர்வாளாக வருவார் என்று நான் இன்றும் நம்பும் இனிய தோழி. மிக்க நல்ல மனதுக் காரி. சமூகம் பற்றி பொங்கி எழும் கோபக் காரி. நல்லதைத் தேடி தேடி மெச்சும் தாயுள்ளம் கொண்ட மிக நல்ல கவிதாயினி….

   அவளின் வருகைக்குக் காத்திருக்கும் அவளின் குழந்தைகளைப் போல நானும் உலக அரங்கின் உச்சியில் அவள் பெயரைக் காணும் படைப்புக்களுக்காய் காத்தே கிடக்கிறேன்…. தங்களின் பாராட்டு, அவரையும் அழைத்துவருமென்று நிறைய நம்புகிறேன்… ஐயா!

 11. kovai.mu. sarala சொல்கிறார்:

  மறுமொழிக்கு மகிழ்ச்சி வித்யாசாகர் மற்றும் சிவசங்கரன் அவர்களே உங்களின் ஊக்கமான வார்த்தைகளில் உறங்கிகொண்டிருகிறது ஏன் கவிதையின் அணுக்கள் தொடர்ந்து தாருங்கள் உங்களின் ஊகத்தை.

 12. kovai.mu. sarala சொல்கிறார்:

  விழித்தெழு மனிதா

  இந்த நூற்றாண்டின் தொடக்கதிலாவாது
  விழித்தெழு மனிதனே – நீ
  நிஜமென்று நினைத்து
  நிழலை பின் தொடர்ந்து செல்கிறாய்
  புதையல் தேடுவதாக நினைத்து
  புதைகுழியில் விழுகிறாய்
  இன்பம் நுகருவதாய் நினைத்து
  புற்றுநோயை சுவைகிறாய்
  துன்பத்தை அணைப்பதாக நினைத்து
  எரிசாரயத்தில் எரிந்துகொண்டிருகிறாய்
  பழையதை களைவதாக நினைத்து
  புழுதியை சேகரிக்கிறாய்
  திருவிழாவை கொண்டாடுவதாக நினைத்து
  அதில் காணாமல் போய்விடுகிறாய்
  போதும் நீ கண்மூடி கிடந்தது
  விழித்தெழு மனிதா !
  விண்ணும் மண்ணும் காற்றும் மழையும்
  உனக்காக காத்திருக்கு
  அவற்றோடு கொண்டாடு உன் மகிழ்ச்சியை

  கோவை முசரளாதேவி

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   விழித்துக் கொண்டிருக்கும் உலகம் தானிது. ஆனால் கந்திறந்தே கொடுமைகள் செய்யும் கொடூர களம். அதை அதட்டி கொடுத்த ஓங்கிய குரலிற்குப் பாராட்டுக்கள்….

 13. kovai.mu. sarala சொல்கிறார்:

  தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்

   புது நெல்லு இல்லை
  புது பானை இல்லை
  இருந்தாலும் பொங்குகிறது
  மனமெங்கும் மகிழ்ச்சி

  இயந்திர வாழ்வில்
  இடைவிடாத வேலையில்
  இன்பத்திற்கு ஏங்கும் மனதிற்கு 
  இனிப்பாய்   ஒரு நாள்  

  இன்ப திருநாள் 
  இதயம் இணையும்
  இதமான எங்கள் 
  தமிழர் திருநாள்  வாழ்த்துக்கள்

  இந்த இனிய நாளிலாவது
  இனம் காணுங்கள் – நம்
  இதயம் திறந்து உணர்வுகளை
  உரிமைகளோடு பரிமாறுங்கள்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அன்பு சரளாவின் எழுத்துக்களுக்கு முதல் வணக்கம், வெகுநாட்களுக்குப் பின் பாயும் நதிபோல தங்களின் பா’த் துவங்கியமை மகிழ்வைத் தருகிறது. வரவேற்பும் தைத் திருநாள் வாழ்த்துக்களும் சரளா…

 14. கோவை மு சரளா சொல்கிறார்:

  கனத்த தலைகள்

  அலை கடலென ஆர்பரிக்கும்
  ஆழ மனதின் அலைகளை
  அப்படியே எனக்குள் அடக்கி கொண்டு
  மௌனித்து தலை குனிகிறேன்
  உனக்கு முன்பு – அதை

  தவறாக புரிந்துகொண்ட
  தலைகால் புரியாமல்
  தலையில் கனத்தோடு
  ஆடுகிறாய் ……..

  என் ஆழ கடல் அலைகள்
  அணைதிறந்து வந்தால்
  அமிழ்ந்து விடுவாய் -அதற்குள்
  அடங்கிபோவாய் – அதுவரை
  ஆடு மனமே ஆடு…………

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   யார்மேல் இத்தனைக் கோபம் சரளா? ஆண்மீது என்று தெரிகிறது, என்றாலும் உலக நடப்பே; மதிப்பதைக் கூட பயம்கொண்டதாகவே எண்ணி நகைத்துக் கொள்கிறது மூடமாய்..

   • கோவை மு சரளா சொல்கிறார்:

    இன்னும் மாறாத இவர்களை கண்டதும் பொசுக்கிவிட துணிகிறது மனம்
    ஆனாலும் இந்த எழுத்துக்கள் இயலாமையின் வெளிபாடுதான் வித்யா ………….

    தொடர்ந்த உங்கள் கருத்து

    பாலைவனத்தில் சாரல் பொழிந்தது போல இதமாக இருக்கிறது மனதுக்கு ………….

 15. கோவை மு சரளா சொல்கிறார்:

  வித்யா
  எழுத்துலகில் வெறும் விருதுக்கும், பரிசுக்கும், கவுரவுதிர்க்கும் மட்டுமே எழுத கூடிய எழுத்தாளர்களுக்கு மத்தியில் நீங்கள் ஒரு கலங்கரை விளக்கமாய் ஊருக்கு ஒளி கொடுக்க நினைகிறீர்கள். உங்களோடு உரையாடுவதே எனக்கு பெருமைதான் உங்களின் சமூக பணியும் எங்களை போன்ற வளரும் கவிஞர்களுக்கான உங்களின் ஊக்கமும் எப்போதும் தொடரட்டும் .

 16. கோவை மு சரளா சொல்கிறார்:

  இழப்பின் வலி

  இழப்பின் சோகம்
  இமயத்தின் சுமையை
  இதயத்தில் இறக்கியது போல
  அதனை கனமாய்……………..

  விலைமதிப்பில்லாஉயிர்
  கல்லெறிந்த
  கண்ணாடியை போல
  நொடி பொழுதில்
  சிதறியது கண்டு
  பதறியது நெஞ்சு…………

  சிதறிய உயிரை மீண்டும்
  உயிர்பிக்க முடியாத
  இயலாமையில்
  கடிந்து கொள்கிறேன்
  கடவுளை …………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s