ஐம்பது சதவிகிதம்
தள்ளுபடி;
எல்லாமே வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்த ஆடைகள்;
இரண்டு வாங்கினால்
ஒன்று இனாமாக தரப் படும்;
வேறெங்குமே
கிடைத்திடாத தரம்;
இப்படியெல்லாம் ஏமாற்றித் தான்
விலைபோகிறது –
ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்!!
————————————————————-
0.000000
0.000000
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About வித்யாசாகர்
நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
மிக அருமையான கவிதை அண்ணா நம் சிட்டிங்கள்ல எல்லாம் இப்போ இப்படி தான் நடக்குது அண்ணா. அக்கறையான கவிதைக்கு பாராட்டுக்கள்.
கல்யாணி. K
LikeLike
மிக்க நன்றி கல்யாணி. நான் முன்னூறு ரூபாய்க்கான பொருளை நானூறு ரூபாய்க்கு வாங்கும் போது கோபம் கொள்வேன்; நானூருக்காக அல்ல, இன்று நான் கொடுத்து ருசி காட்டி விட்டால் நாளை நூறோ ஐம்பதோ சம்பாதிப்பவர்கள் எப்படி வாங்குவார்கள் என்று!
பண்டிகையின் போது வீட்டாரோடு புத்தாடையும் பொருள்களும் வாங்க செல்கையில், ‘பார்க்கும் இடமெல்லாம் படமெடுத்துக் கொள்ளும் புத்தி; பல பைகளோடு, சமுகத்தின் மீதான ஒரு கோபம் சுமந்த மனதையும், ‘சேர்த்து தூக்கிக் கொண்டே வீடடையும்!
LikeLike