உன் வாசத்தில் ஒரு சொட்டு
உன் தாவணிப் பூவிலிருந்து
விழுகிறது –
அள்ளிப் பருகும் காற்றிடம்
கோபம் கொண்டு – உன்
தாவணியை பிடித்தேன் நான்
எனை முறைக்க வில்லை நீ
சிரிக்கவில்லை
பார்க்கிறாய்
பார்க்கிறாய்
அப்படி பார்க்கிறாய்
உன் தாவணி எடுத்து
இரு கை நிறைத்து உயிர்வரை
நுகர்கிறேன் நான்
உன் வாசம் என்னுள்ளே சென்று
என்னவோ செய்வதற்குள்
தாவணியை இழுத்துக் கொண்டு ஓடுகிறாய் நீ
காதலிக்கிறாய் என்னும் பதில்கள் மட்டும்
உன் தாவணிப் பூவிலிருந்து உதிர்ந்து
ஆம் ஆம் ஆம் என்றென கீழே
விழுந்து கொண்டே போகிறது!!
—————————————————————————-