வா..
அந்த மரத்தில்
ஒரு சொப்பு தூளி கட்டி
அதில் காகிதம் சுற்றி
அந்த காகிதத்தில்
உன் பெயரையும் என் பெயரையும்
எழுதினால்
சாமி நம்மை சேர்த்து விடுமாம்;
நாமும் கட்டி வைப்போம்
நம் சமூகம் ஒருவேளை
நம்மை பிரித்துவிட்டால்
இந்த சொப்பு தூளி –
நம்மை காதலர்களென்று சொல்லியே
ஆடிக் கொண்டிருக்கும்!!
——————————————————————