உடைந்த கடவுள் – 24

ங்கத்தில் தொங்கட்டான்
வைரத்தில் மூக்குத்தி
பத்து சவரத்தில் தாலி சரடு
வெள்ளியில் சொம்பும் குத்துவிளக்கும்
பித்தளையில் அண்டாவும் வாலியும்
போதா குறைக்கு –
மாப்பிள்ளைக்கு வண்டியும்
ஒரு லட்சம் ரொக்கமும் கொடுத்து
திருமணம் செய்து வைத்த அப்பாவின்
வட்டிப் பணத்தை –
கணவனுக்கு சொல்லாமல் அழும் கண்ணீரால்
கட்டிட முடிவதில்லை தான்; என்னால்!!
—————————————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உடைந்த கடவுள் – 24

 1. sarala சொல்கிறார்:

  திருமண வயதுவரை தன்னை ஆளாக்கி, நித்தமும் கேட்டவற்றை முகம் சுளிக்காமல் வாங்கி கொடுத்து மனம் கோணாமல் நடந்துகொண்டனர் நாளைக்கு நமக்கு ஒருவேளை கஞ்சி தராவிடிலும் இந்த உலகம் வியக்க வாழவேண்டும் நம் பிள்ளை என்று நினைத்த அந்த நடமாடும் தெய்வங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறோம் பெண்களாக பிறந்ததற்கு உண்மையில் வேதனைப்படும் தருணங்களில் இவையும் ஓன்று .

  உங்களை போன்று எல்லா ஆண் மக்களும் இந்த வலியை வேதனையை உணர்ந்தார்கள் என்றால் நாளைய சமூகம் சமதுவபுரமாய் காட்சியளிக்கும்.

  பெண்ணின் வலி உணர்ந்த வரிகள் ஒரு ஆணின் எழுத்தில் கண்டத்தில் ஆனந்தபடுகிறேன். மனதார நன்றி சொல்லுகிறேன் உங்களுக்கு

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   பொதுவாக ஒரு ஆண் குழந்தை மூத்தவனாக இருக்கும் வீட்டில் அவன் சற்று வளர்ந்ததும் அப்பாவிற்கு உதவியாக இருப்பதுண்டு, அதே எண்ணம் படிக்கும் லட்சியத்தில் வளரும் பெண்களுக்கு ஏன் இருக்கக் கூடாது. நான் படித்து பெரிய ஆளாகி அம்மாவிற்கு புடவை வாங்கித் தருவேன், அப்பாவிற்கு வேட்டி வாங்கி தருவேன் எனும் ஆசை ஒரு பெண்ணிற்கும் இருக்கும் இல்லையா.

   அதையெல்லாம் மூடி; அப்பா படும் துன்பமெல்லாம் கண்டு; வட்டிக்கு வாங்கி செய்த திருமணத்தில் கணவன் வீடு சென்றும் அங்கே குறை சொல்லி சண்டை போடும் வீடுகள் இன்றும் நிறைய உண்டு. அந்த சண்டைக்கு நடுவே அப்பாவின் கட்டாத வட்டிப் பணத்தின் பிரட்ச்சனையும்காதுக்கு வர ஒரு பெண்ணின் மன வலி எப்படி இருக்கும்.

   இவையெல்லாம் கற்பனை இல்லை சரளா, எனை சுற்றி இருக்கும் உலகத்திலேயே நான் பார்த்தும் ஒரு வார்த்தை கூட கேட்க இயலாத மன அழுத்தம்.

   செல்லம்மா கூட முதன் முதலில் நம் வீடு வருகையில் சொல்லும், நான் பெரிய அலுவல் அதிகாரியா ஆக நினைத்தேன் என்று, நான் மறுக்க வில்லை, அவர் போகவும் இலை, அவரை வேலைக்கனுப்பி சம்பாரிக்கவோ, என்னை போல் அவதி பட்டு வரவோ விரும்பவுமில்லை. என் வருத்தமெல்லாம், நம்மை போல் அல்லாது, வரதட்ச்சனைக்கென சண்டை இடும் வீடுகளும், கொடுக்க முடியாத வீடுகளும், கொடுத்துவிட்டும் கடனடையாத அப்பாக்களும், அதை அடைக்க தன் வாழ்க்கையை எங்கேனும் வெளிநாடுகளில் தொலைக்கும் அண்ணன்களும் தம்பிகளும், கணவனையும் இழந்து பெண்களை கட்டித் தர அவதியுறும் அம்மாக்களும் தான்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s