மனசார அன்பை விதவிதச்சி
என் மனசெல்லாம் விதைச்ச தம்பி,
கவிதை படிச்ச அன்பால
உடன் பிறக்காமல் உற்ற தம்பி;
வானம் போல மனசால
ஞானம் – கூட நிரஞ்ச தம்பி,
இனம் காக்கும் உணர்வுள்ள
எழுச்சிக் குறையா நல்ல தம்பி;
இணையத் தாய் கொடுத்த உறவில்
ஈழ மண்ணை போற்றும் தம்பி
என் இனம் காக்க பிடித்த கொடியில்
இன்னொரு கை கொடுத்த – தம்பி;
முகநூல் தமிழேட்டில்
முகம் பார்க்க கிடைத்த தம்பி,
முழு வாழ்க்கை வரமாக – இனி எப்போதும் இருக்கும் தம்பி!
இனிய விஜய ரூபனுக்கு
என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்;
அனைத்து பேரும் புகழும்
வாழ்வின் நற்செல்வங்களும் பெற்று;
நீடூழி நலம் வாழ்ந்து –
நல்ல கவி’யாய் பாரினில் திகழ்ந்து
பெரும் பேருகளோடு நீடு வாழி!!
பேரன்புடன்..
வித்யாசாகர்
வாழ்க வளமுடன்
LikeLike
நன்றி தங்களுக்கும் எனது நன்றிகள்
LikeLike
அண்ணா தங்கள் கவிதையைவிட பெரிய பரிசு என் பிறந்ததினத்திற்கு வேறெதுவுமில்லை…. அழகான வரிகளில் அன்பான சொற்களால் வடித்துள்ளீர்கள்…..
மட்டற்ற மகிழ்ச்சி – என்
மனம் நிiறைய மகிழ்ச்சி – என்றும்
மங்காத மகிழ்ச்சி…..
தங்கள் அன்பு தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்….
LikeLike
மிக்க நன்றிப்பா… என்றும் தமிழ் போல; மங்கா புகழோடு வாழ்க!
வித்யாசாகர்
LikeLike