உலகமும்; ஒரு சின்ன எச்சரிக்கையும் (31)

ப்படியெல்லாம்
செய்தால்
உங்களுக்கு கோபம் வரும் என்றார்; ஒருவர்

‘ஏன்’ என்றேன்

‘சரி என்ன சொன்னால்
கோபப் படுவீர்கள் என்றார்

‘எதற்கு கோபப் படவேண்டும்’ என்றென்

‘அப்போ உங்களுக்கு கோபமே
வராதா’ என்றார்

‘நான் சொன்னேனா’ என்றென்

‘அப்போ
கோபப் படுவீர்களா’ என்று
கேட்டார்

‘படலாம்’ என்றேன்

‘கோபப் அப்டுவீங்களா?!!!
கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில்
புருவம் உயர்த்திக் கொண்டார்

சிரித்துக் கொண்டேன்

‘சாதுங்க நீங்க’ என்றார்

அவரையே பார்த்தேன்

‘ஆழமான பார்வை உங்களுக்கு’ என்றார்

‘அப்படியா?’

‘ஆமாங்க’

‘உண்மையாகவா?’

‘அட சத்தியமாங்க’

‘ஏன் நீங்க அப்படி
பார்க்க மாட்டீர்களா?’

‘பார்ப்பேனே.. பார்ப்பேனே.. தோ..’ அவர்
கண்களை ஆந்தை மாதிரி உருட்டிக் காட்டினார்

‘அசிங்கமா இருக்கே’ என்றேன்

‘ஏன்..???????????????!!!!!!!’

‘ஆமாங்க நல்லாவே இல்ல’ என்றேன்

‘ஏன்..???????????????!!!!!!!’

‘குருடு மாதிரி இருக்கு?’

‘குருடா….!!! யாரு?’

‘நீங்க தான்
ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க’ சற்று நமுட்டாக
சிரித்துக் கொண்டேன்

‘நானா???!!! நானா???!! ஆந்தையா??
என்னை பார்த்தா ஆந்தை மாதிரி தெரியுதா???
நீ மட்டுமென்ன யோக்கியமா – உனக்கும் தான்
நொள்ள கண்ணு’ என்றார் வெடுக்கென்று

‘இப்பதான் சாது’ன்னீங்க

‘ஐயோ; ஐயோ; நீயா சாது!!?
மொடாகண்டன் நீ’

‘ஆழமான பார்வைன்னு கூட
சொன்னீங்களே’

‘அப்போ சொன்னேன்
இப்போ இல்லை, நீ அப்படியில்லை’ என்றார் கோபம்
தலைக்கேறியவராக

‘ஒரே நிமிடத்தில் மாறிவிட்டேனா’ என்றேன்

‘நீ எப்பவுமே
இப்படித் தான் போல
நான் தான் தவறாக புரிந்துக் கொண்டேன்’ என்றார்

‘சரி, இப்போவாவது
புரிந்துக் கொண்டீர்களா’ என்றேன்

‘புரிது புரிது; நீ போ’ என்று
சலித்துக் கொண்டார்

நான் மௌனமாக அங்கிருந்து
நடக்கலானேன்

அவரென்னை
பயித்தியம் என்று
பக்கத்தில் இருந்த யாரையோ அழைத்து சொல்லி
கோபமாக பேசினார்

நான்
திரும்பிக் கூட
பார்க்கவில்லை அவரை

அவரின் சப்தம்
என் காதில் வெகு வேகமாக
குறைந்துக் கொள்ளுமாறு
மிக வேகமாக நடந்தேன்

உலகத்தின் நடத்தை
மனிதரின் மனசு
நாம் தலையாட்டும் வரை தான்;

ஒரு கண்ணை பிடுங்க எண்ணினால்
இரு கண்ணை கொடுக்க
தயாராக இருங்கள் என்பது மட்டுமே என்
உலகத்திற்கான எச்சரிக்கை!
————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to உலகமும்; ஒரு சின்ன எச்சரிக்கையும் (31)

 1. Karthiya .K சொல்கிறார்:

  எச்சரிக்கை எக்கச்சக்கமாக….இருக்கிறதே..

  அனுபவித்தீர்களோ…!!!!

 2. Venkatraman. M சொல்கிறார்:

  The Anger is our In potential! and also shows our ego! if you expecting one ans., but if you received different type of ans. means you will get annoyed and got anger. you will not properly understand your stand on that matter! Without this you feel anger means its child play! There is a Thirukural for this!

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   ஆம்; கோபத்தின் மீது நின்று கொள்வதால் காரியங்கள் பிடிபடுவதில்லை. தோல்வியே மீதப்படுகிறது. தோல்வி தன்னையும் பிறரையும் அழிக்கிறது. அந்த கோபத்திற்கும் காரணம் தான் என்ற அகந்தை என்று அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

   ‘கோபத்தை தூக்கிலிடு’ என்ற தலைப்பில் நான் கூட ஒரு கவிதை எழுதியிருப்பேன். ஓஷோ அவர்களின் ஏதோ ஒரு புத்தகம் கோபத்தை மிக சரியாக அலசும், கர்வத்தை உடைக்கும். பெயர் நினைவில்லை, பல வருடம் முன் படித்தது. மனம் மலரட்டும் போல ஏதோ ஒரு தலைப்பு.

   தங்களுக்கும் மிக்க நன்றி சகோதரர். நல்ல விளக்கம், மொத்தத்தில் கொபமுறுதல் பக்குவமில்லாத செயல், குழந்தை தனத்திற்கு ஒப்பானது என்றீர்கள்.

   என்னை பொறுத்தவரை கோபம் ஒரு ஆயுதம். தக்க இடத்தில் மட்டும் பயனுறுமெனில்; நல்லவனின் கோபத்திற்கு நீதி நிச்சையம் உண்டு.

   எனினும், இது கோபம் பற்றிய கவிதை அல்ல. “உலகம் எப்போதுமே அது போக்கில் சரியாக இருப்பதாகவே எண்ணிக் கொள்கிறது. உலகில் நாமும் அடக்கம்” என்பதை சொல்ல முற்பட்ட முயற்சி மட்டுமே!

   மிக்க நன்றிகளுடன்..

   வித்யாசாகர்

 3. Shravan Sankar சொல்கிறார்:

  கோபம் நம் உடல்நலத்தையும் கெடுக்கின்றது, அடுத்தவர் பாதிக்கப் படுகிறார்களோ இல்லையோ,நாம் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றோம்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   ஒருமுறை கோபம் கொள்கையில்; எத்தனையோ முறை உடலுறவு கொண்ட அயர்ச்சியை தருமாம்’ எங்கோ படித்த நியாபகம்.

   அப்போ நீங்களே பாருங்க நாம் ஒரு நாளைக்கு எந்தந்த இடத்தில் எத்தனை முறை கோபம் கொள்கிறோம், அதனால் எவ்வளவு நாம் பாதிக்கப் படுவோம்; பிறகு சுற்றத்தினருக்கு ஏற்படும் இழப்புகளோ வருத்தமோ என்னென்ன????

   இதெல்லாம் கடந்தும் கோபம் கொள்ளுங்கள். ஒரு செயல் என்று இருந்தால் ஒரு இழப்பு என்று உண்டு. இழப்பிற்கு தக்க செயலா நாம் செய்வது என்பதே கேள்வி.

   அங்ஙனம், கோபம் வரணும்; அதை ஆளத் தெரியனும் என்பதே சொல்ல வந்த கூற்று.

   கொபமேயின்றி வாழும் வாழ்வு ஒன்று தன்னை கோழையாகக் காட்டும், அல்லது கோழையாக்கி விடும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s