நிறைய வீடுகளில்
நிறைய அறைகள்
புழக்கமின்றியே கிடக்கிறது;
வீடற்று இருப்பவர்களை பற்றி
அந்த அறைகளுக்கு
எந்த கவலைகளும் இல்லை,
தெருவில் உண்டு
உறங்கி
புணர்ந்து
தலைமுறைகளை கடக்கும்
ஒரு சாமானியனின் தேவை
நான்கு சுவர் மட்டுமே என
அந்த –
வெற்றுக் கட்டிடமான
கல் மண் கலவைகளுக்குப்
புரிவதேயில்லை!
————————————————-