அன்றெல்லாம்
சுடுகாட்டில் இருக்கும்
வெட்டியான்களை எல்லாம்
விட்டுவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை
பேய் தின்று விடுமோ என்றே
பயம் வரும்;
இன்றும் அதே பயம்
வீடு சுற்றி
நாடு சுற்றி
மனசாட்சியை கொன்றுகொண்ட
பேய்களே உலவுகிறது;
சுடுகாடே –
மேல்போல்!!
——————————————–
மிக மிக உண்மை வித்யாசாகர். நலம் தானே தோழா?
LikeLike
தங்களை போன்றோரின் அன்பினாலும் இறையின் உடனிருப்பினாலும்; உணர்தலினாலும்; மிக்க நலம் அந்தோனி!
LikeLike
மதிப்புக்குரிய வித்யாசாகர் அவர்களுக்கு உங்கள் பதிவுகளை நான் பார்த்தேன்
உண்மையாக மனதில் பட்டத்தை எழுதுகிறேன் ..தரமாகவும் கனதியாகவும் உள்ளது
நன்றிகள் பல உங்களுக்கு வளர்க உங்கள் சேவை
நன்றி ,வணக்கம்
LikeLike
மிக்க நன்றி சகோதரர் வரன். பெயர் புதிதாக நன்றாக இருக்கிறது; வரன். தங்கள் வாழ்த்தினால் மிகையாய் நிறைவுற்றேன். தங்களை போன்றோரின் சொல்லில் புகழ்ச்சியை காட்டிலும் மனதார்ந்த வாழ்த்து இருப்பதை மனதார உணர்கிறேன். மிக்க நன்றி!
LikeLike
எப்படி யோசிகிரீர்கள் வித்யா. இது அனைவரின் ஆழமான பயம் . வெளியில் சொல்ல முடியாமல் கோர தாண்டவம் புரிகிறது உள்ளுக்குள். கண்களை உற்று பார்த்தால் தெரியும் அந்த பேய்களின் அடுத்த உணவு நாம் என்று நாங்கள் சொல்ல நினைத்ததை நீங்கள் முதலில் சொல்லிவிடீர்கள் எங்களின் சார்பில்
LikeLike
அப்படித் தான் சரளா அது. எழுதுகோல் எடுக்கும் போதே; உலகின், மொத்த உயிர்களின் சங்கமத்தில் நம்மையும் கரைத்து விட்டால் பிறரின் அசைவுகளும் அதிர்வுகளும் நமக்குள் ஏற்ப்படும்!
மிக்க நன்றி தோழி!!
LikeLike