தின்பண்டங்களை வீடெல்லாம்
இரைத்தாய்,
அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’
அமைதியானாய்;
ஓயாமல் மேலும் கீழுமாய்
எகிறி எகிறி குதித்தாய்
ஏக சேட்டைகள் செய்தாய்
அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’
அமைதியானாய்;
அம்மாவின் முடி பிடித்து இழுத்தாய்
தலையிலேறி அமர்ந்தாய்
அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’
அமைதியானாய்;
எல்லாவற்றிலுமே அம்மா என்
பெயரை சொன்னதும் பயந்து அமைதியானாய்
மதிக்கிறாய் என்று நினைத்தேன்;
இரவில் விளக்கணைத்து
படுக்க சென்றதும்
எனை தாண்டி அவளுக்கருகில் சென்று
படுத்தாய்;
வா என்றழைத்ததற்கு
ஓவென கத்தி அழுதாய்
வரமாட்டேன் போ..’ என்றாய்,
நீ அடிக்காமலே –
வலித்ததெனக்கு!
——————————————
ஒவொரு தந்தையின் உள்ளார்ந்த பாசம் வெளிபடுகிறது இந்த வரிகளில் இதில் தந்தை தெரியவில்லை தாய்மை தெரிகிறது தவிப்பு புரிகிறது ஆணுக்குள்ளும் தாய்மை உண்டு என்று நிருபிதிரிகிரீர்கள் வித்யா உங்களுக்கு என் வணக்கங்கள் . பெற்றால் மட்டும் தாய்மை இல்லை அரவணைத்து பாசத்தை புகட்டி வளர்ப்பதில் வெளிப்படும் தாய்மை எல்லா தந்தையும் தாய்மையுடன் இருந்தால் இந்த உலகம் பயங்கர வாதத்தில் இருந்து விடுபடும் அமைதி பூங்காவாக மாறும்.
LikeLike
அம்மா; அம்மாவின் அத் தாய்மை; வார்த்தையில் அடக்கவோ, அளக்கவோ இயலாத வடிவம். அப்பாவின் அன்பும் அரவணைப்பும் அதற்கு நிகரென்று சொல்ல நிறைய பேர் நம்முன் வாழாமலில்லை சரளா.
வயிற்றில் சுமப்பதில் தாயும், வாழ்க்கை முழுதுமாக சுமப்பதில் தந்தையுமென இரு பெரும் தெய்வங்கள் முதலாக இருப்பினும், சில ஆண்களின் பொறுப்பற்ற அல்லது வக்கிரத்தின் உச்சியில் நின்று அன்பிற்குரிய உறவுகளை கூட தன் ஆளுமைக்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் போக்கினால் நிறைய தந்தைகளின் தன்மை பொதுவாக அல்லது வெகுவாக பேசப் படாமல் போனது.
தன் மனைவியை அழைத்து வருகையில் துடிக்கும் மனைவியின் தந்தையையும், மகனை வளர்க்கையில் தவிக்கும் ஏங்கும் அப்பாவையும் ஆராய்ந்து பார்த்து தான் ஒரு தந்தையின் அன்பை உறுதி செய்துக் கொள்ள வேண்டுமென்றில்லை, உணர்பவர்களுக்கு அது புரியும் சரளா!
தங்கள் அன்பான வணக்கத்திற்கும் அன்பிற்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகளும் பதிலாய் மிக்க வாழ்த்துக்களும் உரித்தாகட்டும், சமுக நெருப்பு உள்ளே தணல் விட்டெரியும் ஒரு மனதால் மட்டுமே அது போன்ற இன்னொரு மனதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது!
LikeLike
அம்மா என்றால் அன்பு,
அப்பா என்றால் அறிவு
அறியபடுவான் ஓர் நாள்
LikeLike