மருத்துவமனைக்குப்
போகிறோம்
ஊசி போடவேண்டுமென்கிறார்
மருத்துவர்,
நீ என்னவென்று தெரியாமல்
சிரித்துக் கொண்டு
அமர்ந்திருக்கிறாய்
அவரும்சிரித்துக் கொண்டே
உன் புட்டத்தில் ஊசி வைத்து குத்தியெடுக்க
வீல்!!!!!!!!!!!!! என கத்துகிறாய்…
சரிப்பா.. சரியாகும் சரியாகும்
என்கிறேன்
நீ என் மார்பினை கட்டி இறுக்கி
வலியை தாளாமல்
கண்ணையிறுக்கி
அழுத்தியதில்
உன் கண்ணீர் முழுதும் நானாக
கரைந்தே போனேனடா..
———————————————–