வளர்ந்து நீ
பெரியவனாகி
என்னென்னவோ
செய்ய வேண்டுமென்றெல்லாம்
எனக்கு கனவுகளில்லை,
நீ நன்றாக வளர்வாய்
உனக்கு நான்
பலமாக மட்டுமே இருப்பேன்,
கடைசி வரை நீயெனக்கு;
இல்லையில்லை –
நான் உனக்கு
அப்பாவாக இருப்பதொன்றே போதும்!
—————————————————-
வளர்ந்து நீ
பெரியவனாகி
என்னென்னவோ
செய்ய வேண்டுமென்றெல்லாம்
எனக்கு கனவுகளில்லை,
நீ நன்றாக வளர்வாய்
உனக்கு நான்
பலமாக மட்டுமே இருப்பேன்,
கடைசி வரை நீயெனக்கு;
இல்லையில்லை –
நான் உனக்கு
அப்பாவாக இருப்பதொன்றே போதும்!
—————————————————-
அப்பா மாரின் எண்ணத்தை அப்படியே கவியாய் தந்த வித்தியாசாகருக்கு எனது பாராட்டுக்கள்.
LikeLike
அன்பின் ஐயா அவர்களுக்கு நன்றி. தங்களின் பாராட்டுக்களால் இன்னும் பெருமையுறுவேன்!!
நிறைய பேர் தனதான ஆசைகளை தன் குழந்தைகளின் மேல் திணிக்க முனைவதில்; தந்தையின் கனவும் குழந்தைகளின் எதிர்காலமும் ஒருங்கே பாதிக்கப் பட்ட நிலையெல்லாம் நாம் கண்ட ஒன்று.
எனவே; தன் குழந்தை நன்கு வளர, நல்ல குணங்களை பெற, நாம் அவர்களுக்கு முன்னோடியாக இருந்து காட்டி; வளர்ந்ததும் அவர்கள் எதையும் அடையும் பலத்தையும், எதை அடைய வேண்டுமோ அதை சரியாக சிந்திக்கும் திறனையையும் மட்டுமே கொடுத்திருப்போமெனில், சென்ற இடமெல்லாம் அக்குழந்தைக்கு வெற்றி தானே. குழந்தையின் மகிழ்வை காட்டிலும் ஒரு தந்தைக்கு வேறென்ன எதிர்பார்ப்பு அக்குழந்தையிடம் அத்தனை பெரிதாகஇருந்துவிடும்!
ஒரு குழந்தைக்கு பெற்றோரே முதல் ஆசிரியராக இருக்கிறோம் எனும் பட்சத்தில்; நல்ல ஆசிரியர்களாக இருக்க வேண்டியதும் நம் பொறுப்பே!!
LikeLike
//நான் உனக்கு
அப்பாவாக இருப்பதொன்றே போதும்!//
ஒரு தகப்பனின் கம்பீரம் தெரிகிறது!
LikeLike
மிக்க நன்றி சகோதரர். நிறைய தந்தைகளின் கம்பீரமாக இப்படைப்பை கொண்டதில்; யாரேனும் ஒருவரின் வலியையாவது ஒரு மகனாவது புரிந்து தன் தாய் தந்தையரை நன்றாக கவனிப்பாரெனில் மகிழ்வோம்.
வளர்ந்த பின் தந்தையை நிறைய இடங்களில் நினைத்துக் கொள்கிறோம், வளரும் போதே உணராத ஏதேனும் ஒரு பிள்ளை உணர; ஒரு கவிதையாகவாவது கரைந்திருக்கவே ‘நீள்கிறதிந்த ஞானமடா நீயெனக்கு!
LikeLike
நண்பனே ஒரு தந்தை தன் பிள்ளைமீது கொண்ட நியாயமான அன்பை சித்தரித்து எழுதி இருக்கிறிக
ரொம்ப நல்லா இருக்கு . ஆனால் இன்றைய இளம் சமுதாயம் அதை கண்டுகொள்வதில்லையே ; அன்னையர்
தினம் கொண்டாடும் உலகம் ஏன் நல்ல தந்தையர்களை மறந்து விடுகிறது .
LikeLike
மிக்க நன்றி தோழி, உலகின் தடங்களில் ஆண்களின் ஆளுமை அதிகம் இருந்த காலத்திலிருந்து, ஒருபுறம், பெண்மையும் தாய்மையும் அதிக அளவில் உயர்வு படுத்தவும்பட்டுள்ளது. எங்கோ ஒன்றென்றின்றி, இப்போது பெண்களும் எல்லோருமாய் எழுந்து நிற்க துணிந்த காலம், துணிக்கப் பட்ட காலம் என்பதால், இனி அப்பாக்களின் கண்ணியமும் பெருமையும் நேர்மையும் தியாகமும் கூட பேசப் படலாம்.
ஆண்கள் நினைத்தார்கள், பதியவும் செய்தார்கள். பெண்கள் நினைத்தார்கள், பதிய அனுமதிக்கப் படாத ஆணாதிக்கத்தால் தந்தையின் தியாகத்தை கூட இதயத்தில் எழுதி வைத்தனர் பெண்கள். ஆண் பதிந்திருக்கலாம் என்கிறீர்களா, அவனுக்கு அம்மாவே பெரிதாக தெரிந்தாள்.
இன்றும் பெரிதாகத் தெரிகிறாள்; இனியும் பெரிதாகவே தெரிவாள்; என்றென்றும் பெரிதாகவே தெரியத்தக்கவள் தாய். தந்தையும்!!
LikeLike