உனக்கு பிடித்ததை மட்டுமே
நான் வாங்க
முயல்வேன்;
உனக்குப் பிடிக்காதது
என்று ஒதுக்கிய
சிலதில்
என் பெயரும் ஏனோ
முன்னுக்கு வருகிறது,
ஆம்; நிறைய வீடுகளில்
நிறைய அப்பாக்களை
நிறைய பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை போல்;
அடிக்காத அப்பாக்களை தவிர!
—————————————————-