காதலின் காதலை பகிர்ந்தும்
காதலை கலக்காத நட்பில்,
அண்ணன் தங்கை ராக்கி கட்டாத
நட்பில் இறுகிய மனதில்;
சற்று அதிர்ந்து பேசியதற்கு கூட
பிறகுவருந்தி தோளனைத்துக்கொண்ட பண்பில்,
உதவிக்கு முன்னிலாவிட்டாலும்
ஆபத்தில் பின்னிற்க இயலாத நெருக்கத்தில்;
வாழ்வின் சுவரெல்லாம்
இதயத்தின் பலமாக பூசிய உறவில்,
உயிர் பதிக்கும் அன்பின்
நகரும் தெருவெலாம் நட்பு நட்பு நட்பென்றே –
உலகின் வெற்றி கோபுரம் மீதேறி
நமக்கான நம் பெயரெழுதி
நம்மை நண்பர்களாக மட்டுமே
பதிவு செய்வோம்……………….வா!!!!!!!!!
அனைத்து உயிர் சுமந்த நட்புறவிற்கும்
இனிய தோழமை தின வாழ்த்துக்களும் அன்பும்!!
வித்யாசாகர்
தங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!!
LikeLike
அன்பு ராதாவிற்கும் மிக்க தோழமை தின வாழ்த்துக்கள்.
எங்கிருந்தாலும் நினைவிலிருக்கும் நட்பை இம்மருமொழியும் உணர்த்துகிறது.. ராதா.. என்றென்றுமே நட்பிற்கும் நன்றிக்குமானேன்!!
LikeLike