போர்வீரர்கள்
யாருமே சாகாதவர்கள்
நமக்காக உயிர்தியாகம் செய்து
நம்மோடு –
வாழ்பவர்கள் என்பதை
ஒத்துக் கொள்ளும் நாம்
எப்படியோ
எதிரி நாட்டின் வீரர்களை மட்டும்
கொண்று விட்டதாகவே சொல்லி
வெற்றிக் கொடி ஏற்றுகிறோம்!
கொடியில் தெரியாத ஒரு உயிர்
வண்ணங்களுக்கிடையே கலந்து
இறந்த எல்லோரையுமே
நினைவில் கொண்டுக் கொள்கிறது!!
——————————————————————
ம்
LikeLike
மிக்க நன்றி தமிழ்தோட்டம். மௌனமே சம்மதம் என்று தான் பொருளாம்.உங்களின் ம்’ ஆம் என்ற சந்தோசத்தை தந்தது!
LikeLike