ஞானம் என்பது
அறிவென்று பொருள் கொள்;
அறிவு
சிந்தித்தலில் மட்டுமல்ல
செயலோடு
சிந்தித்தலில்
சிந்தித்து செயல் படுவதில்
செயலுக்கும் அனுபவத்திற்கும் சிந்தனைக்கும்
இடையே முடிவுறாத ஒன்றாய்
மீண்டும் முளைக்கிறது.
முடிவுற்ற அறிவு
அதாவது முடிவுற்ற ஞானம்
பேசுவதில்லை,
பேசக் கிடைப்பதில்லை
செயல்களாய் செயல்களில்
கலந்துகொள்கிறது!
கலக்காதவரை
சப்தமிடுகின்றன
அரைகுடத்தின் நீரலைகள்!
———————————————————
அறிவு
சிந்தித்தலில் மட்டுமல்ல
செயலோடு
சிந்தித்தலில்
சிந்தித்து செயல் படுவதில்
செயலுக்கும் அனுபவத்திற்கும் சிந்தனைக்கும்
இடையே முடிவுறாத ஒன்றாய்
மீண்டும் முளைக்கிறது.
good lines. vaalthukal.
LikeLike
மிக்க நன்றி சகோதரி. செயல்களுக்கு முன் எண்ணங்கள் இனிறியமையாதது எனினும் எண்ணங்களை கடந்தும் செயலாற்ற வேண்டியது மிக முக்கியம் இல்லையா. தொலைபேசியை கண்டுபிடித்த கிரகாம்பெல்லை தான் நமக்குத் தெரியும், ஆனால், அதற்கும் முன் தொலைபேசியை இன்னொருவர் கண்டுபிடித்துவிட்டிருக்கிறார். பெயர் மறந்து போயிற்று. ஆனால் அவர் அதை பதிவு செய்ய தாமதித்தநேரம் எத்தனையோ நிமிடங்கள் தானாம்.
இன்று அவர் அடையாளம் கூட இல்லை. இது முன்பு எங்கோ வரலாற்றில் படித்த நினைவு. இதுபோல் வெளியில் தெரியாத நிறைய சாதனைகள் நிகழ்த்தப் பட்டும் படாமலும் தோல்வியாய் மட்டுமே போனதற்குக் காரணம் செயலுருவும் கூட. அந்த செயல்களின்றி வாய்பேச்சில் வீழும் வீனர்களாய் நாமும் சேர்க்கப் பட்டுவிடக் கூடாது. எண்ணமும் செயலும், செயல்களின் பின் அடக்கமும் நமக்கு வெற்றிக் கொள்வதோடல்லாமல், அந்த வெற்றியை பிறர் மகிழவும் பெற வைக்கிறது!
LikeLike
அருமை வாழ்த்துக்கள்
LikeLike
மிக்க நன்றி தமிழ்தொட்டம். இந்தக் கவிதைக்கு நிறைய வார்த்தைகள் தாண்டிய அர்த்தம் உள்ளது. நம் இந்தப்படைப்பின் ”மூலக் கவிதை” கூட இது தான். முழுக்க முழுக்க இதுபோன்ற சூழ்சுமம் பற்றி பேசுவதாகவே இந்நூல் விளங்குமென்றாலும், அதை பேச எனக்கு என்ன தகுதி இருந்து விடும் என்பது எனக்குள் எழுந்த மற்றொரு கேள்வி. அந்த கேள்விக்கு கிடைத்த தலைப்பே.. இந்த அறை குடத்தின்………….. ‘நீரலைகள்’ என்பதாகும்.
குறிப்பாக, தீர்வாக எதையும் சொல்லும் அளவிற்கு நாம் கற்றது மிகக் குறைவு. உணர்வுகளை சிலிர்ப்புற பதிய எண்ணிய இடத்தில் அனுபவம் குறித்தும், ஞானம் குறித்தும் பேச நமக்கு முழு தகுதியோ ‘போதுமான அறிவோ இல்லையென்றாலும், அதை தூண்டி விடும் காரணியாக மட்டுமேனும் நாம் இருக்கலாம் என்பதே கடைசியாக ‘இந்தக் கவிதைக்கு முன், தீர்மானமான ஒன்று!
LikeLike