விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்
சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்
உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை
திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!
உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு
பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு
மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை
விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!
அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு
உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு
உடமையெல்லாம் இழந்தாலும் –
எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்
மார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
காதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
யாரடிச்சு யார் மாண்டுபோயினும் – எவனடிச்சும் சாகா தமிழனுக்கு
எழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்!
பெண்ணென்றால் போகமென்றே வாழ்ந்தவனும்
அடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்
வைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்
திடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்
சேர்த்துக் கிடைத்தது; சுதந்திரம்!
உயிருக்கெல்லாம் மண்ணென்ற விலைவைத்து
மண்ணிற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர்வைத்து
ஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்
மாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; சுதந்திரம்!
காக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த
வெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்
மார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்
தியாகத்திற்குக் கிடைத்தது; சுதந்திரம்!
ரத்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து
முடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை
அடிமை அடிமை என்ற ஓர்சொல்
அடங்கமறுத்து அடங்கமறுத்து பெற்றது; சுதந்திரம்!
வீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து
வீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து
வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து
என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை
எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!
——————————————————————–
வித்யாசாகர்
அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களுக்கு,
வணக்கம். ஒரு முழு சுதந்திர குடிமகனாக என்னை நான் உணராத பட்சத்தில் கொண்டாட்டதிலிருந்து விலகிக் கொள்பவனாகவே என் வாழ்த்தினை மட்டும் பகிர்கிறேன். காரணம், இன்றும் ஒரு தமிழனாக என் ‘முழு’ கருத்தை பேசவும், என் வீட்டிற்கு ஒன்றென்றால் போதிய நியாயம் பெறவும், என் இன மக்கள் அழிக்கப் பட்ட போது சென்று தடுத்துவிடவும் ஒரு இந்தியக் குடிமகனாக ,உழு உரிமையையோ தக்க சுதந்திரத்தையோ பெற்றுவிடாத இளைஞன் தானே நான்.
எனினும் அவைகளை மீறி, அந்நியக் கொடூரனான வெள்ளையனிடம் நாம் பட்ட வலி, அடைந்த துன்பங்கள், பறிக்கப் பட்ட உடைமை என அத்தனையிலிருந்தும் விடுபட்டு அவனிடமிருந்து பெற்ற விடுதலையின் மகிழ்வினை இங்கே பகிர்ந்துக் கொள்ளும் முகமாய் என் மனமார்ந்த வாழ்த்தினை எம் உறவுகளோடு பகிர்கிறேன்.
பொதுவாக சுதந்திரம் என்றாலே, அவர் வாங்கித் தந்தார் இவர் வாங்கித் தந்தார் என்று சொல்லிப் பெருமை படுகிறோமே, ஒரு தமிழராக ‘நாம் பட்ட வேதனை வரலாறுகளை பேசுகிறோமா, எல்லோராலும் பேசப்படுகிறதா. தேசம், விடுதலை, சுதந்திரம், ஒற்றுமை எனும் நேரத்தில் பிரிவுணர்வோடு இதைபகிர வில்லை, என்னை பற்றி பேச மறுத்து, என் நலன் பற்றி அக்கறை கொள்ள மறந்து, எம் இனம் அழியும் ரத்தக் கரையில் ஒரு தேசக் கொடிக்கு ஒரு தேசத்தின் பிள்ளையாய் வணக்கம் சொல்ல வலிக்கவே செய்கிறது.
எனவே, நான் அடி பட்டேன், நான் வெள்ளையனால் துன்புறுத்தப்பட்டேன், நான் வெள்ளையனால் அடக்கப் பட்டேன், நான் வெள்ளையனால் அடிமை படுத்தப் பட்டேன். என் வாழும் உரிமை, நான் வாழ்ந்த இடம், வீடு, நிலம் வெள்ளையனால் பறிக்கப் பட்டது. அதை எதிர்க்கப் போராடினேன். உயிர் தந்தேன், ஒரு தமிழனாய் ரத்தம் சிந்தினேன், அதற்க்குக் கிடைத்தது சுதந்திரம். அதை பற்றி மட்டும் பாடுகிறதென் கவிதை!
அதற்காக இந்தியத் தாயின் கடைமகன் அல்ல நான், தமிழச்சிக்கு முதல் பிள்ளை என்பதை மட்டுமே பதிவுசெய்கிறேன். அனைவருக்குமென் விடுதலை பெற்றதன் வாழ்த்துக்கள் உறவுகளே!!
பேரன்புடன்..
வித்யாசாகர்
LikeLike
மிகவும் அருமை நண்பரே. தன்மானமுள்ளவன் நீர்………….
வாழ்க தமிழ் உம்மோடு இணைந்து
LikeLike
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி விக்கி.
உதட்டுசிரிப்பை விட
உள்ளத்தின் புண்ணிற்கு மருந்திடும்
விரைத்த முகம் கூட பரவாயில்லை என்பேன்.
யாரையும் பிரித்துப் பார்க்கும் எண்ணம் எனக்கு அறவே இல்லை.
எனினும் என் தேசம்; எனக்குமான, எனக்குமான யெனில் என் தமிழருக்குமான ‘தேசமாக இருக்கவேண்டும் என்பதே என் ஏக்கம்!
LikeLike
இந்தியாவிற்கு சுதந்திரமா? இந்திய பிரஜைகளுக்கு….? ஒரு வயதானவரின் கெஞ்சல்களால் கிடைத்த சுதந்திரம் இன்று கேடு கெட்ட அரசியல் வாதிகளின் வியாபரப் பொருளாகிவிட்டது. அண்டை நாட்டு பாதிக்கப்பட்ட இனங்களின் சுதந்திரங்களைப் பறித்து வாழ நினைக்கும் ஒரு வெட்கம் கெட்ட நாட்டிற்கு சுதந்தரம் தேவையா….?
LikeLike
இல்லை யாழ், அப்படி ஒட்டுமொத்தமாக தரம் குறைத்து பேசுமளவு மலிவான தேசமல்ல இந்திய தேசம். என் கோபம், என் தேசத்தின் மீது என் மண்ணிற்கான உரிமை கோருமளவு மட்டுமே. வருத்தம் கொள்ளவே வைக்கிறது நான் வசிக்கும் தேசத்தின் இந்த ஒரு அரசியல் கேவல தனம் யாழ். எத்தனையோ சொல்லவொன புகழாடைகளை கட்டி கனகம்பீரமாய் உலக நாடுகள் முன் நிற்கும் பாரத தாய்க்கு, மனிதமற்று நடக்கும் அரசியலால் நேரும் அவச் சொல் ‘இனியாவது அவர்களை, இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு திரியும் இன்றைய அரசியல் தலைவர்களை, ‘திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திடாதா.. யாழ்..????
LikeLike
7
LikeLike
Super sir
LikeLiked by 1 person
வாழிய நலம். நன்றி ஶ்ரீ.
LikeLike
நன்றி
LikeLike