உறக்கம் சொக்கும்
கண்களுக்குள்
காமத்தையும் கறுத்த இருள் படர்ந்த
இருட்டையும் புகுத்தும்
ஒரு பொழுதாகவே
இரவை எண்ணுகிறது மனசு;
வெற்றியாளனின் உழைப்பில்
இரவும் பகலும்
பெயரற்றுக் கிடக்கிறது!
———————————————–
உறக்கம் சொக்கும்
கண்களுக்குள்
காமத்தையும் கறுத்த இருள் படர்ந்த
இருட்டையும் புகுத்தும்
ஒரு பொழுதாகவே
இரவை எண்ணுகிறது மனசு;
வெற்றியாளனின் உழைப்பில்
இரவும் பகலும்
பெயரற்றுக் கிடக்கிறது!
———————————————–
//வெற்றியாளனின் உழைப்பில்
இரவும் பகலும்
பெயரற்றுக் கிடக்கிறது//
இது மிகப்பெரிய உண்மை சகோதரரே!
அரைகுடத்தின் நீரலைகள்’ எல்லோரையும் சென்றடையுமா என்ற ஒரு பயம் எழுகிறது சகோதரி. இந்த பயத்தில் தான் மரபு கவிதைகளின் கரம் தவிர்த்தேன். ஒரு சாமானியனுக்குப் புரிவதே, ஒரு சாமானியனை சென்றடைவதே படைப்பு; அதற்கே இலக்கியத்தின் தேவையும், என்பது என் எண்ணம், என்றாலும், இதை ஒரு அவசியமான பதிவுகளாக கருதியும், மெல்ல எல்லோரையும் சென்றடையும் என்று நம்பியும், உங்களை போல் சகோதரிகளும் உறவுகளும் இருக்கவே செய்கிறீர்கள் என்ற அன்பின் மெச்சுதலிலும், நன்றிகளுடன் மேல் செல்கிறேன் சகோதரி.
நானெல்லாம் எப்பொழுது விழிக்கிறேன்,எப்பொழுது எழுகிறேன் என்றே தெரியவில்லை. ஒரு பெரிய நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டுத் துரையின் பொறுப்பும், இடையே சமுகத்தின் விழிப்பிற்கான தேடலும், எழுத்தும், உறவுகளும் இதர அனைத்துமாய் நாட்கள் கண்சொடுக்கினாற்போல் கடக்கிறது, எனக்கெங்கே இரவும் பகலும்???!!