வணக்கக் கவிதைகள்; முகநூல் தோழி லல்லிக்கு சமர்ப்பணம்!

பூங்காற்றின் வாசத்தில்
என் பெயரெழுதி வைப்பதற்கு பதிலாக
உன் பெயரை பரிந்துரைக்கிறேன்;
நட்பின் வாசம் –
பூங்காற்றெங்கும் பரவட்டும்!!

இனிய அன்பு வணக்கம்!
———————————————————————–

வீழும் நட்சத்திரங்களாய் இன்றி
வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே..
நல் –
இரவு வணக்கம்!
———————————————————————–

மீட்டுமொரு வீணையின் இசையாய்
உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது,
அந்த பாடலுக்கான யாரோ ஒருவரை
அந்த மனசு தேடிக் கொண்டே இருக்கிறது,

…தேடியவரை பெறாத நிம்மதியை
நட்பும் மிகையாய் தருகிறதென்று மகிழ்வோம்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

வ்வொரு வணக்கத்திலும் கேட்கிறது
தமிழுக்கான இசையின் வாசனை;
தமிழுக்கான வாசனையில் மிளிர்கிறது
வணக்கமும்!
———————————————————————–

ரு மனக்குயிலின்
ஒயிலாக உள்ளே சப்தமெழுப்பி
நிற்கிறேன் ;
சப்தம் நட்பாய் நிறைகிறது
சப்தம் ஒரு வணக்கத்திற்குள்ளே
முடிகிறது!’

அன்பு வணக்கம்!
———————————————————————–

ரு நிலவு பூத்த
இரவின் நிசப்தத்தில்
எண்ணிடாத நட்சத்திரங்களாக கனக்கும்
மனதின் சுமையை
வணக்கம் சொல்லும் ஒரு தோழமையின் குரல்
உடைத்துத் தான் விடுகிறது;

அன்பு வணக்கம்!
———————————————————————–

ணர்வூட்டும் பொழுதுகளில்
எங்கேனும் கிடைத்து விடுகிறது
கவிதைக்கான கரு –
சிறு வணக்கத்தில் கூட!

அன்பு வணக்கம்!
———————————————————————–

சி
வார்த்தைகளை மட்டுமே
தேட அவசியமின்றி
அன்பிருந்தால் உடனே வந்துவிடுகின்றது
வணக்கமென்று!

அன்பு வணக்கம்!
———————————————————————–

வாழ்வின் வெற்றிடங்களை நிரப்ப
ஏதேனும் ஒரு உயிர்
எங்கேனும் ஓரிடத்தில்
நமக்குமாய் பிறந்துகொண்டுதானிருக்கிறது;
பிறருக்காக நாமிருக்கும் பட்சத்தில்!

அன்பு வணக்கம்!

———————————————————————–

ழுதுகோலின்
நுனிவரை வந்துவிடுகிறது
வார்த்தை-

எடுத்து வணக்கமாய்
சேர்த்ததில்
கவிதையானது…

இனிய காலைவணக்கம்!
———————————————————————–

ரெல்லாம்
இட்டுக் கொண்டிருக்கும்
கூச்சலுக்கு இடையேயும்
ஒரு கவிதை கேட்கும் இசை போல
தந்திரம் கொள்கிறது உன்
வணக்கத்தின் ஓசை;
ஒரு நான்குவரி கவிதைக்கேனும்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

முகங்கள் –
என்னவாக வேண்டுமாயினும்
இருக்கட்டும்,

உயிரை –
தமிழாகவே
வைத்திருப்போம்!!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ரு கதைசொல்லியாக வாழ்வதைவிட
நாம் வாழ்ந்ததை
ஏதேனும் ஒரு கதை சொல்லட்டும்.

என்றாலும், நம் கதைகளும்
யாரேனும் வாழ்வதற்கான
வழியை சொல்லலாம்;
அதற்குத் தக்க எழுதுவோமெனில்!
அன்பு வணக்கம்!
———————————————————————–

போவது உயிரென்று
தெரிந்தும்,

…விடுவது உயிரென்று
தெரிந்தும்,

உயிரை விட்டனர் தமிழர்
தமிழை விடவில்லை.

இருப்பினும்,
தமிழ் –
உயிர்கொள்ளவில்லை;

தமிழை –
தமிழரை கொள்வதாய் எண்ணி
தன்னைதான் கொண்று கொண்டிருக்கிறான்
சிங்களவன், என்பதை –
காலம் உணர்த்தும்.

காண –
நாமிருப்போமா யெனில்
கேள்வி தான்!!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ரு காதலியோடு போகும் போது மட்டும்
மிக சாதாரணமாக யாரிது என்று கேட்கும்
மக்கள் –
எப்படியோ; தங்கையோடு போகும் போது மட்டும்
யாரிது ‘காதலியா என்று கேட்க
…நா கூச மறுக்கிறது!

அன்பு வணக்கம்!
———————————————————————–

தயம் இரும்பாலானது இல்லை எனினும்
நேரமும் இருபத்தியெட்டு மணிநேரமாக
இல்லையே தோழி –

எனவே இருக்கும் நேரத்தில் வணக்கம் சொல்லக் கூட
இருபத்தி நான்கு மணிநேரம்
குறையென்று எண்ணிய இடையில்
அன்பால் அதை கடந்து ஓடி வந்து
விடுகிறது மனசு; அன்பு வணக்கம் சொல்ல!

இனிய இரவு வணக்கம்
———————————————————————–

ணர்வெல்லாம் நிறைந்த
மொழியின் அழகை கைகளில் குவிப்போம்;
வாய் வணக்கமென்று சொல்லும்,

அதில் கலந்த அன்பு
மனதை வெளியே புன்னகையாய் காட்டும்;

புன்னகை வணக்கத்தில்
பூக்கட்டும் இந்நாள் உறவுகளே!!
———————————————————————–

ல் போல இறுகிய மனதிற்கு
அல்லது சதையாக பிணைந்த இதையத்திற்கு
தன்னை மனிதம் மிக்கதாக மாற்றிக் கொள்ள
பெரிதாக ஒன்றுமில்லை –
அன்பொன்றே தேவை படுகிறது;
அன்பு செய் உறவுகளே..

இனிய காலை வணக்கம்
———————————————————————–

ரவினை கவலம் கவலமாகவே விழுங்கும்
வலியான மனப்போக்கினை
இயல்பாய் வந்து மாற்றிவிடுகிறது
நட்ப்பின் ஒரு சின்ன வணக்கம்!
———————————————————————–

கோடிக்கு மேலான
நட்சத்திரங்களின் எண்ணிக்கையாக,

ஒற்றை நிலவின் ஒளியாக
உலகமாய் விரிந்த மனதாக
பெரிதாக எல்லாம் ஒன்றும் வேண்டாம்
ஒரு புன்னகைக்கும் அன்பு செய்; போதும்!
அன்பு வணக்கம்!

———————————————————————–

ள்ளிக் கூடத்தில் நட்பு பெற்று
நட்புகூடத்தில் பாடம் கற்று
பாடத்தில் வராத புத்தகத்தில்; மனம் புதைத்ததில்
முகங்கள் பல கிடைத்தன,
மனங்கள் பல இணைந்தன,
ஒன்றுக்கொன்று முகம் பாராமலே –

முகநூல் தெருவெல்லாம்
நட்பென்றே கொடி நாட்டின!!

அன்பு வணக்கம்!

———————————————————————–

யிர்மீட்டும் வீணையின்
ஓரிழை நட்புமெனில் –

உடன்பிறக்காமலே உயிர்புகும்
உறவென்னும் இசைக்கு …
நட்பே உயிர்ப்பென்று கொள்க!

அன்பு வணக்கம்!
———————————————————————–

காதலின் காதலை பகிர்ந்தும்
காதலை கலக்காத நட்பில்,
அண்ணன் தங்கை ராக்கி கட்டாத
நட்பில் இறுகிய மனதில்;

சற்று அதிர்ந்து பேசியதற்கு கூட
பிறகுவருந்தி தோளனைத்துக்கொண்ட பண்பில்,
உதவிக்கு முன்னிலாவிட்டாலும்
ஆபத்தில் பின்னிற்க இயலாத நெருக்கத்தில்;

வாழ்வின் சுவரெல்லாம்
இதயத்தின் பலமாமாக பூசிய உறவில்,
உயிர் பதிக்கும் அன்பின்
நகரும் தெருவெலாம் நட்பு நட்பு நட்பென்றே –

உலகின் வெற்றி கோபுரம் மீதேறி
நமக்கான நம் பெயரெழுதி
நம்மை நண்பர்களாக மட்டுமே
பதிவு செய்வோம்……………….வா!!!!!!!!!

அனைத்து உயிர் சுமந்த நட்புறவிற்கும்

இனிய தோழமை தின வாழ்த்துக்களும் அன்பும்!!

அன்பு வணக்கம்!
———————————————————————–

தோ ஒரு அலைவரிசையிலல்ல
அன்பென்னும் ஒரு வரிசையில் மட்டுமே
ஏங்கி நிற்கிறது நம்மை போல்
சில் இதயங்கள் –
வணக்கத்திலாவது நம் நினைப்பை பரிமாற்ற!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்றோ பிரிந்த
ஏதோ ஒரு உறவின்
நெருக்கமாய் –
ஏங்கி திரியும் ஒரு மனதின் பிரதியாய்
நாமும் நம்மை
வணக்கத்தால் புதுப்பிப்போம்;

அன்பு வணக்கம்!
———————————————————————–

வ்வொரு உயிர்களுக்கும்
இடையே ஏதோ ஒரு நெருக்கம்
இருக்கத்தான் செய்கிறது.

அது ஏதேனும் ஒரு அருகாமையில் தன்னை
அடையாளம் கண்டுகொள்கிறது.

அங்ஙனம் நமக்கு நெருக்கமானவர்களை
அடையாளப் படுத்த இணையம் ஒரு வரமென்று சொல்லி
வணக்கத்துடன்… நன்றிகளுமாய்….. நிறைகிறேன்..
———————————————————————–

ருட்டென்று நாம் உணர்கிறோமாயினும்,
சிறு வெளிச்சத்திலிருந்து வந்த
பெரு வெளிச்சக் காலையில் –

வாழ்வும் சிறு தவறுகளிலிருந்து விலகி
…பெரு நன்மையாய் அமையட்டும்
அனைத்து உயிர்களுக்கும் –

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்பிற்கு ஏங்கும் மனசு தான்;
அன்பிற்காக பொறாமை கொள்ளும்.

பொறாமை எல்லோருக்கும் இருக்கும் உணர்வு
எல்லோரும் வெளியே காட்டிக் கொள்வதில்லை.

முயன்றவரை பொறாமையிலா தன்மை வேண்டும்
பொறாமை அறுத்தல் என்பது
நம் வெற்றிகளோடு நில்லாமல்
பிறரையும் வெற்றிக் கொள்ளவைக்கும்.

ஒருவேளை தான் தோற்றாலும்;
பிறரின் வெற்றியில் மகிழும்.

பொறாமை வளர்ப்பது;
சமூகம் எரிப்பதற்கு சமம்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ரெல்லாம் சிரிப்பு சத்தம்…
அதில் உன் சிரிப்பு மட்டும்
எனை தொட்டதில்
சிரித்தது நீயுமென்றுணர்ந்தேன்;

அன்பு வணக்கம்!
———————————————————————–

வானத்திற்கு ஒரு கவிதையின் போர்வையிட்டு
உள்ளே மனிதத்திற்கான சப்தமெழுப்பி
அன்பெனும் மைகொண்டு
அகிலம் முழுதும் நம்மை
உறவென்று பதிந்து வைப்போம்; வா..
சகோதரா சகோதரி உறவு –

அன்பு வணக்கம்!
———————————————————————–

வானம் வசப்படாத பொழுதுகளில்
வசப்பட்ட அனுபவத்தின் கற்றை சிந்திப்பில்
மீண்டுமான முயற்சியில் விழித்துக் கொள்கிறது
கவிதை; வானம் கவிதைகளில் வசப்படுமென்று!

இனிய அன்பு வணக்கம்!
———————————————————————–

வேலைக்கு விடுமுறை
விடுமுறை இல்லாத நிறைய வேலைகள்
எழுத்தில் பொதிந்துள்ளதால்
என்றுமில்லை விடுமுறை;

எனினும் நலமோடு அன்பு வணக்கம்!
———————————————————————–

லகின் எந்த புள்ளியில் இருந்தாலும்
நேரங்கள் மாறுகிறது
நம் அன்பு மாறுவதேயில்லை’ என்ற
ஒற்றை புள்ளியில் தமிழால் இணைந்தோம்;

இனிய மாலை வணக்கம்!

———————————————————————–

சிரிப்பில் கண்ணீரில் கோப கனலில் வெறுமையில்
தோல்வியில்
ஆற்றாமையில் உதிரும் நாளாக இன்றி
சிரிப்பில் மலரும் வாழ்க்கையாய்
துவங்கட்டும் இந்நாளும்; எல்லாம் உயிர்க்கும்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

சிரிப்பில்
கண்ணீரில்
கோப கனலில்
வெறுமையில்
தோல்வியில்
ஆற்றாமையில் உதிரும் நாளாக இன்றி
சிரிப்பில் மலரும் வாழ்க்கையாய்
துவங்கட்டும் இந்நாளும்; எல்லாம் உயிர்க்கும்!

அன்பு வணக்கம்
———————————————————————–

பூக்கும் மலருக்குப் பின் செடியும்
செடிக்குப் பின் வேரும் போல
இந்த கவிதைக்குப் பின் இருக்கும்
அன்பிற்கு வணக்கமும்!
———————————————————————–

லக துயர் மறந்து;
தனக்கான கனவுகளோடு விடை கொள்வோம்;
நாளைய விடியலுக்காய்; உறங்கி விழிப்போம்!

இனிய இரவு வணக்கம்
———————————————————————–

ணினி கண்களை குருடாக்கியும் ஓயாத
எழுத்தார்வத்திற்கு இடையே வந்த கடமை
மறுக்க முடியா இடைவெளி என்பதால் –

இப்போதே வணக்கம் சொல்ல இயன்றது
இப்போதே காண முடிந்ததால்!

அன்பு வணக்கம் அனைத்து உறவுகளுக்கும்!
———————————————————————–

சிறு உளிகொண்டு
செதுக்கும் சிற்பம் போல்

அன்பெனும் பெரும் வேதத்தை
வார்த்தைகளென்னும் –
உளியும் செதுக்குகிறது;

அதிலொன்றை
அன்பு
வணக்கமென்றுக் கொள்வோம்!
———————————————————————–

யிர்சொட்டும் உறவுகள்
வணக்கத்தில் நட்பூர
வெறும் வணக்கமென்று சொல்லாமல்
நட்பாகவே கரைகின்றேன்;

இனிய அன்பு வணக்கம்!
———————————————————————–

நேரம் கிடைக்கையில்
என் மனம் போர்த்தி கொள்கிறது
இந்த இணையம்..

தமிழாய்..
நட்பாய்..

கரைதலில்
மிட்சப் படாத நேரத்தில்
தொக்கி நிற்கிறது சில எழுதிப் பதிந்திடாத
கவிதைகளும் படைப்புக்களும்..

நேரம் அமைகையில் கண்டிப்பாக வருவேன்
அன்பு வணக்கம்!
———————————————————————–

முறியாத சோம்பலை உடைத்தெறிந்து விட்டு,
விண்ணை எட்டும் நம்பிக்கை பலமேற்றி,
சாதிக்கும் முயற்சிகளை பார்வையில் இருத்தி,
உலகவலம் வரும் ‘இணைய உறவுகளுக்கு

இனிய காலை வணக்கம்!
———————————————————————–

ன்பிற்கா பஞ்சம்;
அழைத்தால் பழகுவதிலே மனசு துஞ்சும்.

பேச பேச தமிழ் கொஞ்சும்,
இருப்பினும்; நேரம் கருதியே உடன்பட அஞ்சும்!!
தமிழாய் கவிதைகளாய்.. படைப்புக்களினூடே நிறைய பேசுவோம்

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்பில் கலந்த தமிழ்;
ஆண்ட மொழியை ஆட்கொள்ளும் வேகம்.
உட்புகும் நெருப்பிற்கு கூட – சிரிப்பு
நிறம் போர்த்திவிட்டதில்; இனிக்கிறது போல்
எதற்கோ ஏங்கி எரியும் தணல்; தமிழென!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்பு; மொழியெனில்,
என் தாய்மொழி
அதுவென்று கொள்க!

அன்பு வணக்கம்!
———————————————————————–

ன்பின் இதயத்தால் கட்டுண்டு போவோம்
அன்பினால் மனிதம் நிலைக்க செய்வோம்
அன்பிற்காய் உலகை தமிழ் கொண்டு வெல்வோம்!

அன்பு வணக்கம்!
———————————————————————–

கேட்டார்க்கு
கேட்டதை கொடுப்போம்
முகநூலை உறவு
பாலமாய் அமைப்போம்
உறவில் அன்பை வளர்ப்போம்…
அன்பில்… …சகோதரத்துவம்
மலர்விப்போம்;

அந்த சகோதரத்துவத்தில்;
இங்கேனும் ஒற்றுமை
ஓங்கி
தமிழர்களாய் இணைவதில்;
ஒரு இனத்தின் பண்பை புதுப்பிப்போம்!

புதுமையில் பொலிந்த நம் பண்பிற்கு
உலகம் –
மீண்டும்
தமிழர்
என்றே பெயர் வைக்கட்டும்!!

அன்பு வணக்கம்!
———————————————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to வணக்கக் கவிதைகள்; முகநூல் தோழி லல்லிக்கு சமர்ப்பணம்!

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    வணக்கம் சொல்வது தமிழரின் சிறப்பு பண்பில் ஒன்றென்றாயினும், நேரம் கருதி பதிவுகளோடு விடை பெரும் இணைய உறவுகளின் நெருக்கத்திலும், அதை வளர்க்க ஈகரையில் வணக்கம் சொல்லி வந்த கவிதைகளே இப்பக்கத்தில் பதியப் பட்டுள்ளன.

    அதோடு, முகநூல் மூலம் வணக்கத்திற்கான வாய்ப்புகள் ஆங்காங்கே இருந்தாலும், என் பணிகளின்கண் நான் தனித்திருக்க ‘நாள் தவறாது நட்பின் பலத்தை வணக்கத்தால் பெருக்கிய உறவுகளுக்கும், அதிலும் எல்லோரையும் தாண்டி வந்து எனக்கான அன்பை முகப்பில் பூசிய வண்ணமாய், முகநூலின் முகத்தில் பதிந்து சென்ற சகோதரா சகோதரிகளுக்கு குறிப்பாய் லல்லி அவர்களுக்கு இவ்வணக்கக் கவிதைகள் சமர்ப்பணமும் நன்றிகளும்!

    படைப்புகள் தேடி நம் வலைதளத்திற்கு வருவோரில், அதிக பேர் தேடியதில் வணக்கக் கவிதைகளும் ஒன்றாகும். அதின்றி இவைகளெல்லாம் பிற்காலத்தில் புத்தகமாக்கப் படவும் உள்ளன!

    எனினும், அந்த ‘பிற்காலம்’ என்றதற்கான கால தூரத்தை காலமே நிர்ணயிக்கும்!

    வித்யாசாகர்

    Like

  2. lalitha murali சொல்கிறார்:

    அருமை வித்யா என் சுவரில் பகிர்ந்து கொள்ளட்டுமா

    Like

  3. lalitha murali சொல்கிறார்:

    நன்றி சொல்லி நம் நட்பின் தூரத்தை அதிமாக்க எனக்கு விருப்பமில்லை

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      லல்லிக்கு இல்லாததா… தாராளமாக பகிர்ந்துக் கொள்ளலாம்.

      “வாங்குவதை விட கொடுப்பதில் மகிழ்வேன்; நல்லதை.
      கொடுப்பதை விட வைத்துக் கொள்வதில் முயல்வேன்; தீயதை”

      மிக்க நன்றிகளுடன்… வேண்டாம் நீங்கள் //நன்றி சொல்லி நம் நட்பின் தூரத்தை அதிமாக்க எனக்கு விருப்பமில்லை// அப்படி சொன்னதால் நானும் சொல்ல வில்லை லல்லி; நன்றி!

      Like

  4. rk.guru சொல்கிறார்:

    அருமையான கவிதை வரிகள்……தொடருங்கள் உங்கள் பயணத்தை எங்கள் வாழ்த்துகளுடன்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி குரு. உங்களின் வாழ்த்துக்களில் மிளிர்வேன்.. இன்னும் உயர்வேன்.. உங்கள் எழுத்துப் பணிகளும் மிகையாய் தொடரட்டும்.

      இது ஒரு நன்றி செய்தலுக்கான அடையாளம். அவர்கள் கொடுத்த அன்பை திருப்பிக் கொடுத்த சுவடுகள். உங்களை போன்று எனை ஈர்ப்புடன் படித்து வாழ்த்துபவர்களுக்கு அதை திருப்பி செலுத்திய நன்றி..

      இது என் காலத்திற்குமாய் தொடரும்.. குரு. அதில் உங்களை போன்றோருக்கான நன்றி நிறைந்தே இருக்கும்!

      Like

  5. lalitha murali சொல்கிறார்:

    ஒரு காதலியோடு போகும் போது மட்டும்
    மிக சாதாரணமாக யாரிது என்று கேட்கும்
    மக்கள் –
    எப்படியோ; தங்கையோடு போகும் போது மட்டும்
    யாரிது ‘காதலியா என்று கேட்க
    …நா கூச மறுக்கிறது!///////////உண்மை வித்யா ஆனால் இது போல் நாக்கூசாமல் பேசுபவர்களை நான் அலட்சியபடுத்திவிடுவேன்..புரிந்துகொள்ளாமல் பேசுபவர்களை நாம் ஏன் மதிக்கவேண்டும் இல்லையா?இது என் கருத்து தவறு என்றால் மன்னிக்கவும்:)

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தவறென்றில்லை லல்லி. எவரையும் மன்னிக்கலாம். மன்னிப்பதே ‘சில இடத்தில்’ மானுட தர்மம். ஆயினும் ஒரு புரிதல் வேண்டும். புரிந்து கொள்ளுதல் வேண்டும். அந்த புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும். ஏற்படுத்தின் அவரின் நன்றிக்கு கூட நாம் பாத்திரமாகலாம்!

      Like

  6. Annie Nicewyn சொல்கிறார்:

    really all r superb. sorry vidhya without ur permission i have used ur kavithai in my facebook post. sorry for that and wish u a bright & properous future to u maaaaaaaaaaaaa.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      படைப்புக்கள் என்பது சமூகத்தை நோக்கித் தொடுக்கும் ஒரு போர் அல்லது அதன் மீது காட்டும் அன்பு அல்லது ரசனை. ஆக, அது மொத்தமும் சமூகமாகிய உங்களுக்குமானது சகோதரி.

      எங்கு வேண்டுமோ எடுத்துப் பதிந்துக் கொள்ளுங்கள் ஆனால் ஒரேயொரு வேண்டுகோள்; படைப்பின் கீழ் அல்லது மேல் இது இன்னாருடைய படைபென்று குறிப்பிட்டுக் காட்டுவது நல்லது. காரணம் அது நாளை நம் படைப்பு புத்தகங்களாக்கப் படுக்கையில் சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இருக்க உதவும்.

      மற்றபடி எழுதிய என்னைக் காட்டிலும் அதை உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் உங்களைப் போன்றோரே நன்றிக்கு உரியவர்கள்!!

      மிக்க அன்பும் வணக்கமு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் தோழி..

      Like

  7. Lalitha Murali சொல்கிறார்:

    நீண்ட வருடங்களாயும் அதே அன்பு நட்பு..நிறைய அன்பும் ப்ரியங்களும் வித்யா

    Like

  8. lalitha murali சொல்கிறார்:

    மெமரீஸ் வித்யா 🙂 ❤

    Liked by 1 person

lalitha murali -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி