செஞ்சோலை தெருவெல்லாம்
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;
தமிழ் படித்த சிறுமியின் குரல்
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;
பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்
மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே;
மறக்க இயலா மரணச் சூட்டின் –
மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் –
சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் –
முளைத்தெழு உறவுகளே;
அடிப்பவனை மன்னிக்கலாம்
அவனே திருப்பி அடிபானெனில் – திருப்பி அடித்தவனை
திருப்பி அடிக்கும் வரை
அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே
மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே;
செத்தவன் செத்தவளெல்லாம் வெறும்
சுப்பனும் குப்பனுமல்ல;
எம் விடுதலையை ‘உயிர்விடும் வரை காத்த வீரர்கள் –
அவர் உறைந்த மண்ணில் மீண்டும்
புடைசூழ் படையென திரண்டு நில் உறவுகளே;
தோளிலிட்ட மாலை வாடும் சூட்டிற்குமுன்
தாலி பறித்தவன் சிங்களவன் –
அவன் பொட்டில் அரைந்து சொல் – எம்
விடுதலை எத்தனை வலிதென்று; எம்
சுதந்திர தேசம் எம் லட்சியமென்று!
இணைந்து வாழும் வேடம் பூண்டு
இரந்து நிற்கும் கயவனின் கூட்டம்,
தூக்கிக் காட்டிய வெள்ளை கொடியை
தட்டிவிட்டு; சுட்ட அதர்ம வர்க்கம்,
இரண்டாம் தர இடம் தந்தே எமை
மரணம் வரை மண்டியிட செயும் மதப்பை
ஆணவத்தை –
தகர்த்தெறிய புறப்படு உறவுகளே;
உயிர் பறிக்கும் கழுகுகளுக்கு
குழந்தையின் கண்ணீரெப்படி புரியும்?
உயிர் பறித்து
ஆடை களைந்து
நிர்வாணம் ரசித்து
பிணத்தை புணரும் ஜாதிக்கு; புனிதம் எப்படி புரியும்?
உயிர்துடிப்பின் சப்தம் அடங்கும் முன்
உறவுகளை சுட்டெறிந்த வஞ்சகனுக்கு – நாம்
வாழ்ந்து படைத்த சரித்திரம் மண்ணெனப் பட்டதோ???
மாண்டவரெல்லாம் ஆண்டவரென்பதை
கத்தி கதறி ஓலமிட்டு மரணம் நெருங்கிய
ஒவ்வொரு பிஞ்சுகளின் அழுகையும் –
காற்றில் ஒலியில் காலத்தின் தலையெழுத்தினில்
எழுதிவிட்டே தன் இறுதி மூச்சினை நிறுத்தியிருக்குமென
வெகு விரைவில் பறக்கும் புலிக்கொடி
எதிரியின் செவிட்டில் அரைந்து சொல்லும்!
அன்று அடங்கும்
எம் வீரர்களின் –
அந்த செஞ்சோலை பிஞ்சுகளின் ஆத்மாக்கள்!
அதுவரை ஓயாதீர் உறவுகளே…………………..
——————————————————————————–
வித்யாசாகர்
ஒவ்வோரு தமிழீழ மொட்டும் கருகியெரிந்த வேதனை எம் உயிர் அணுக்கள் முழுதும் இருக்கிறதே , மறக்க முடியுமா? மறக்கத் தான் செய்வோமா? இதற்கான பதிலடி…….?!
பதிலடி உண்டு யாழ். உப்பை தின்றிருக்கிறான், நாம் போட்ட உப்பை தின்று நமக்கே துரோகம் இழைக்கிறான். அவன் தண்டிக்கப் படட்டும் படாமல் போகட்டும் அதை இறைவன் பார்த்துக் கொள்வார். ஆனால் நமக்கான நீதி யொன்ருண்டு. நம் இதே மண்ணில் ஓர் தினம் நம் மழலைகளாவது சுதந்திரமாய் நடந்து செல்லும். அது வரை மறப்பதென்ன வலிக்கட்டும் நம் இழப்புகள்.
வலிக்க வலிக்கத் தான் வழி தேட முயல்வோம் யாழ்!
மறக்க முடயுமா? அந்த கொடிய வலியை!
நினைக்கும் நொடியெல்லாம் எனை எரிக்கும் வேதனை இந்த கொடுமையின் காரணமெழுந்து கொழுந்துவிட்டெரியும் விடுதலை தீ..