இளமை கனவுகளை
ஈழத்தில் தொலைத்தவரே,
விடுதலையின் எழுச்சிக்கு
எட்டுதிக்கும் பறந்தவரே,
ஈழதேசம் என் நாடென்று
எல்லை தமிழனுக்கும் சொன்னவரே,
எம்மின மக்களுக்காய்
தன்னலம் துறந்தவரே,
அண்ணன் தம்பி நீயென்று
என் சனத்தொட வாழ்பவரே,
லட்சியம் ஒன்றென்று
சத்தியம் காத்தவரே,
கத்தி கத்தி பேசி பேசி
எம் அடையாளம் மீட்டவரே,
சுட்டெரிக்கும் வார்த்தையினால்
எதிரியை சுண்டி; சுண்டி எறிந்தவரே,
எரிக்கும் கனல் பேச்சாலே
எமக்கு சுதந்திர தாகம் கொடுத்தவரே,
பணம் பார்க்கும் திரையில் கூட
பாடம் சொல்லி தந்தவரே,
மொழிக் குற்றம் முதல் குற்றமென
எம் காதுகளில் அறைந்தவரே,
அண்ணன் தம்பி பாசம் ஊட்டி
இளைய பட்டாளம் வலைத்தவரே,
தமிழென்னும் அமுதுக்கு
தவமாய் கிடப்பவரே………
சீமானே….. சீமானே…………
வடுகப் பட்டியிலிருந்து வாட்டிகன் சிட்டி வரை
தமிழர் உள்ளம் நிறைந்த சீமானே –
இளையோர் சொல்லி மகிழும் சீமானே….
உனை சிறைக்கம்பி என்ன செயும் – பார் உன்
நரைமுடிக்குக் கூட பயந்து போகும் சீமானே……….
மண்டைக்கேறிய பயமும்
கட்டிப் போடும் சூழ்ச்சியும் – உனை
ஆயுள் முழுக்க என்ன அடக்கியா போட்டு விடும் சீமானே…..?
அடக்க இயலா எழுச்சியின்
பெருந்……….. ‘தீ’ ………… நீயென அறியாமலா
இருந்துவிடும் சீமானே……?
நீ கிளறிவிட்ட சுதந்திர புரட்சி – இனி நீ
சொல்லாமலும் சுடர் விட்டெழும் சீமானே…….
மேஜை தட்டி தட்டி நீ பேசிய தமிழ்
கையினை தூக்கி தூக்கி மேலே நிறுத்திய உன் தமிழ்
உனை காக்கும் பொருட்டே
விரைவில் ஓடிவரும் சீமானே………………
பொருள் படைத்தவர் அழைத்ததை எல்லாம்
உதறிய உன் மனமும் உண்மையும் உனை
எப்பொழுதுமே காக்கும் சீமானே…………..
எங்கள் இதயம் முழுதும் நீயிருக்க
உனக்கு சின்ன சிறையென்ன
அந்தமானில் கூட வைக்கட்டுமே சீமானே;
அந்த – அந்தம்மான் கூட – உனைபெற்று
தனை திருத்திக் கொள்ளும் சீமானே……..
உன்னோட தமிழ் கேட்டு
அந்நிய மொழியை அறுத்துக் கொண்டதெம்
தமிழ்மக்கள் சீமானே……….
திருத்திக் கொண்ட மொழியின் –
மண்ணின் –
நன்றிக் கடலெனப் பொங்கி – உனை
வெல்லும் பலம் கொள்ளச் செய்யும் சீமானே……
உன் அன்பில், அக்கரையில், வேகத்தில், விவேகத்தில்..
உடைபடும் சிறை – பார் சீமானே………
விரைவில் –
வெற்றி கொள்ளுமுன் லட்சியமென்பேன் – காரணம்
லட்சியத்தில் எனக்கும்; தமிழர்க்கும்; பங்குண்டு சீமானே!!
—————————————————————————
வித்யாசாகர்
அன்பிற்கினிய உறவுகளே…, நம் நன்மைக்கென அதிக நாள் தூக்கத்தையும் நம் சமூகத்திற்கென தன்னாலியன்ற நல்லதுகளையும் செய்ய எண்ணியவர் அவர். அவரின் மனசும் குணமும் அவர் எங்களோடு குவைத்தில் தங்கியிருந்த ஓரிரு நாளில் அறிய முடிந்தது. பிரியும் நேரம் மனதால் இணைந்து போனார். என் வீட்டின் ஒரு சகோதரன் என்றெண்ணினோம். பொருளேதும் வேண்டுமா என்றதற்கு கூட இந்த உணர்வும் அன்பும் போதும் என்றவர்.
அவரின் பாதை எத்தனை சரி என்பது தெரியவில்லை, ஆனால் மனசு சுத்தம், நமக்காக போராடிய அந்த உண்ணத மனிதருக்கு நம் அன்பையாவது காட்டலாமே என்று தான் இக்கவிதை இங்கே பதிய பட்டது!
நல்ல உணர்வுள்ள, துடிப்புள்ள, சமுக கொடூரங்களின் மீது கோபமுள்ள, தமிழ் பற்றுள்ள, ‘ஒவ்வொரு இளைஞனுக்கும் ‘தம்பி’ மற்றும் ‘வாழ்த்துக்களின் படமெடுத்ததன் காரணம் புரியும். அப்படி, திரையில் கூட பணம் பார்ப்பதை கடந்து எதையேனும் இச் சமுகத்திற்கு, நம் சமுகத்திற்கு செய்ய வேண்டும் என்று மனசார எண்ணிய உள்ளமது.
அரசியல், சுயநலம் எல்லாம் உதறி தள்ளுங்கள், அவர் ஏறிய ஒவ்வொரு மேடையிலும், நாம் ‘தமிழரென்னும்’ முழு உணர்வை நமக்கு மிதமாய் தந்து என் உறவுகள் நீங்கள் போதுமென்று, தனியாய் நின்று போராட எண்ணினாரே, எம் ஈழ மக்களின் விடுதலைக்கு முன் வந்து நின்று முழு உரிமையோடு குரல் தந்தாரே… அந்த உணர்வுகளை நினைவு கூறும் ஒரு சகோதரத்துவமான கவிதை மட்டுமே.. இது என் அன்பிற்குரிய தோழர்களே.
பொதுவாக, நல்ல, நம்மை விட உயர்ந்த பிரபலம் மிக்கவர்களோடு புகைப்படம் எடுத்திருப்பினும் ‘அவைகளை டம்பத்திற்கு வேண்டி பிரசுரிப்பது போலாகி விடுமோ’ என்று எண்ணி பதிவதில்லை, தனியாக ஒரு திரி ஆரம்பித்து அதில் வேண்டுமாயின் தெரிதலுக்குப் போடலாம் என்று எண்ணுவேன், இருப்பினும் இங்கு இதை இவர்களோடு எடுத்த படத்தை பதிந்ததன் காரணம் ‘இந்த நெருக்கத்தினால், இந்த அன்பினால் எழுதப் பட்டதே இக்கவிதை ‘வேறெந்த எதிர்ப்பார்ப்பும் நோக்கத்தோடும் அல்ல என்பதற்கு ஒரு சான்றாக மட்டுமே, என்ற என் என்னத்தையுமிங்கே பதிவு செய்கிறேன் உறவுகளே!
மிக்க நன்றியும் அன்பும் எல்லோரின் மீதும் உண்டாகட்டும், நம் அன்பு நம்மையே நமக்கு முழுதாய் திருப்பி தரட்டும்!
LikeLike
ஒரு உண்மை தமிழனின் அருகில் இருந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்க பெருமூச்சு எனக்கு. சீமானின் சத்தத்தில் தானே உறங்கி கொண்டிருந்த பல தமிழர்கள் விழித்தனர். இதை மறக்க முடியுமா, நாளைய வரலாறு பேசுவதை விட இன்று நாம் பேசுகிறோமே, இதுதானே நாம் வாழ்ந்த வாழ்கையின் அர்த்தம். அதை புரிய வைத்த சகோதரன் சீமான் அவரை போன்ற, உங்களை போன்ற, தன்னலமற்ற தமிழன் இருப்பதால், தமிழ் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது!
LikeLike
ஆம் சரளா, தமிழ் தமிழர் நலனை, ஈழ மக்களுக்கான விடுதலையை மட்டுமே ‘இலக்காக கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதரிவர் என்பதை அவரின் அருகாமையில் உணர்ந்தேன்.
அறிவுமதியையாவும் இளைய படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் இருந்து தன்னால் இயன்றதை தமிழுக்கு செய்வதே தன் கடனென்று இருக்கிறார்கள். ஜாதி மதம் கடந்து ஒரு நட்பான சகோதரத்துவமான ஒரு சமூகம் அமைப்பதில் முனைப்போடுள்ள இவர்களுக்கு நன்றியறிவிக்கும்முகமே நம் பதிவாக அமையட்டும்!
தங்களின் அன்பிற்கும் மிக்க நன்றி!
LikeLike
மிக்க அருமை. உங்களின் இக்கவிதை நம் தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.. நன்றி!
LikeLike
தொடர்ந்து உங்கள் தளத்தில் நம் படைப்புக்களை பதிந்து வருவது பெரும் மகிழ்விற்குரியது. ஆனால் அதை விளம்பரப் படுத்தும் முகமாக இங்கு பதிகிரீர்களோ என்றே சிலசமயம் அகற்றி வந்தேன். பிறகு, ஒருவேளை எனக்கு தெரிவிக்கும் முகமாய் பதிவீர்களோ என்றே அங்கீகரிக்கப் பட்டுள்ளது. எனினும் தங்களின் நட்பிற்கும் ஆதரவிற்கும் நம் எழுத்தின் மீதான அக்கறைக்கும் மிக்க நன்றிகள் பல..
LikeLike