சொக்கவைக்கும் தமிழில்
சொக்கித் தான் போனது காதலும்;
சொக்கித் தான் போனேன் நானும்
சொக்கவைத்தவள் அவள்!
அவளொரு –
மரத்த தமிழச்சி,
அந்த மரத் தமிழச்சி பற்றிய கவிதையில்
இதோ..யென் காதலிங்கே களம் கொள்கிறது..
தெருவெல்லாம் நெட்டையாய் நின்ற
பனைமரக் காலமது,
வாய்ஜாலம் விற்று தண்ணீர் பிடிக்கும்
ஒற்றைக் குட ‘நீருக்கான பஞ்சமது,
அந்தக் குழாயின் –
வாயடிச் சண்டையில்
கைகட்டி நின்றவளின் பார்வையிலிருந்து
பூத்ததெம் காதல்.
கண்களின் –
காட்சிப் பிழைபோல் தெரிந்த உலகத்தை
சற்று திருத்தி –
என் ஆண்டைகளின் வீரத்தை
போதித்தது காதலே.
அதோ…
சல் சல் சலங்கை ஒலியிட்டு
பவனி வருகிறாள் அவள்;
அவளின் கால் கொலுசு சப்தத்திலிருந்து
கரையத் துவங்குகிறது என் மனசும் காதலும்
அன்றெல்லாம் –
அவளை காணும் தினமே – நான்
வாழும் தினமென்றுக் குறித்துக் கொள்வேன்,
கானாதப் பொழுதுகளை –
கவிதைகளால் கிருக்கிச் செல்வேன்;
அதில் –
கவிதையில் – காதல் பூத்தது;
காதலில் –
அவளும் நானும் கரைந்தோம் கலந்தோம்
காற்றில் நடந்தோம்
கைவீசி போட்ட ஒய்யார நடையில்
ஜாதியின் மதத்தின் கண்களில் குத்தினோம்!
விழித்துக் கத்திய சமூகத்தை
உடைத்துப் போட்டதெங்கள் காதல்.
ஆம்;
ஜாதிக்கு மதத்திற்கு தலைவிரித்தாடும்
ஆட்டம் சொல்லி என்
நேற்றைய தலைமுறையை ஒரு நூற்றாண்டிற்கு
தட்டிவைத்ததிந்த சமுகமில்லையா?
மனித உயிரின் உயிர்பயமில்லாது
தன் சுயநல வெறியின் பசிக்கு
என் இளைய சமுதாயத்து உயிர்களை
தின்றதிந்த சமுகமில்லையா……?
இதோ கைகோர்த்துக் கொண்டு
கிணற்றில் வீழ்கிறோம்
முடிந்தால் பிரித்துக் கொள் உன் ஜாதியை என்றோம்,
வாய் பிளந்துப் பார்த்தது சமூகம்
எண்களின் பிணத்தை!
அதற்காக –
இறந்து விட்டோமென்று நினைக்காதீர்……..
என் தம்பி காதலிப்பான்
என் மகன் காதலிப்பான்
என் மகள் கூட காதலிப்பாள்
ஜாதி
மதம்
நாற்றமெடுத்துப் போகும்;
மனிதம் காதலில் மிஞ்சும்; காதல்
கவிதையாகும்!
கவிதையில் காதல் பூக்கும்!!
———————————————-
வித்யாசாகர்
//அதற்காக –
இறந்து விட்டோமென்று நினைக்காதீர்……
என் தம்பி காதலிப்பான்
என் மகன் காதலிப்பான்
என் மகள் கூட காதலிப்பாள்
ஜாதி//
உண்மைதான் வித்யா. காதல் அவர்களுக்குள் இருக்கும் போது இனிப்பாய் இருந்திருக்கும் அதை மற்றவர்கள் கைகொல்லும்போது அவர்களுக்கு கசப்பாக தெரிவது ஏன் என்று தான் புரியவில்லை. காதலுக்கு இந்த சமூகம் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், தான் பெற்ற இன்பத்தை யாரும் பெற கூடாது என்ற எண்ணம் தான். எபோது மாரப்போகுதோ இந்த சமுதாயம்.. உண்மையான நேசத்தை விற்றுவிட்டு பொய்யான வாழ்கையில் புதைந்து போகவே துடித்து கொண்டிருக்கிறது. நாமாவது நம் சந்ததியினருக்கு சொல்லுவோம், காதலிக்கசொல்லுவோம், காதலின் மகத்துவத்தால் மட்டுமே ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்த்துவோம்.
உங்களின் வரிகள் இந்த சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கட்டும்
//மதம்
நாற்றமெடுத்துப் போகும்;//
LikeLike
//காதலுக்கு இந்த சமூகம் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், தான் பெற்ற இன்பத்தை யாரும் பெற கூடாது என்ற எண்ணம் தான்// ஒருவேளை தான் பெற்ற துன்பத்தை தன் குழந்தைகள் அடையும் முன் தடுத்து விடுவோம் என்பதுமாகவும் இருக்கலாம் சரளா.
காதலை பற்றிய தவறான பார்வைக்கு நம் சமூகம் நம் இளைஞர்கள் நிறைய சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளதும் ஒரு காரணம். காதல் எவ்விதம் சரி எவ்விதம் தவறு என்பதற்கே காதலர்களின் நிலை கொண்டு எண்ணமும் ஒத்துழைப்பும் எதிர்ப்பும் மாறுபடுகிறது. காதலை பற்றிய ஒரு சம புரிதல் பெற்றோருக்கும் இளைய சமுதாயத்திற்கும் ஏற்பட வேண்டும். அபப்டி ஏற்படும் புரிதலில் சேரும் காதல்களால் எதிர்காலத்தில் ஜாதிமதத்தின் கொடூர முகங்கள் கிழிக்கப் பட்டு மனிதம் நிலை நாட்டப் படலாம் சரளா.
உங்களைபோன்றோரின் அன்பில் நட்பில் எண்ணப் பகிர்தலில் சமுதாயத்தின் மாற்றம் மேள்ளவாவது ஏற்படும் சரளா… மிக்க நன்றி!
LikeLike